டெல்லி: எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை நெடுஞ்சாலைகளில் அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
நெடுஞ்சாலைகள், அதி விரைவுச்சாலை, பேருந்து நிலையத்தில் அதிக திறன் கொண்ட சார்ஜிங் நிலையம் நிறுவ முடிவு செய்துள்ளது.
நெடுஞ்சாலைகளில் 360 கிலோ வாட் திறன் கொண்ட சார்ஜிங் நிலையங்களை அமைக்க ஒன்றிய அரசு. நெடுஞ்சாலைகளில் அமைக்கப்படும் சார்ஜிங் நிலையங்கள் மூலம் 15 நிமிடங்களில் வாகனங்களுக்கு சார்ஜ் செய்ய முடியும். ஜாகுவார், பென்ஸ் எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் சார்ஜிங் செய்யும் வகையில் சார்ஜிங் நிலையம் அமைகிறது
மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை நெடுஞ்சாலைகளில் அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 68 நகரங்களில் 2,877 சார்ஜிங் நிலையங்கள் அமைக்க அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஒன்றிய அரசு மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, நெடுஞ்சாலைகளில் சார்ஜிங் நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, ஒன்றிய அரசு ஃபேம் இந்தியா (FAME India) திட்டத்தை 2015 இல் உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், மின்சார வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் நல்ல பலன் கிடைக்கும்.