தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயும் அரசியல் ரீதியாக பல சிக்கல்களை சந்தித்து வருகிறார். ஏற்கனவே அவரின் ஜனநாயகன் திரைப்படத்தை முடக்கிவிட்டார்கள். இந்த படத்துக்கு சென்சார் எப்போது கிடைக்கும் என்பது யாருக்கும் தெரியவில்லை
. ஒரு பக்கம் அவரின் மீதான சிபிஐ விசாரணையும் தீவிரமடைந்திருக்கிறது. கடந்த 13ம் தேதி ஏற்கனவே விஜய் டெல்லி சென்று கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை விஜய் ஆஜரான நிலையில் இன்று மீண்டும் அவர் டெல்லி சென்று விசாரணையில் ஆஜராகியிருக்கிறார்.
அப்போது அவரிடம் கரூர் சம்பவம் தொடர்பான பல முக்கிய கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் எழுப்பியிருக்கிறார்கள். அதற்கெல்லாம் தமிழக காவல்துறை வழிகாட்டுதல் படியே நாங்கள் செயல்பட்டோம்.. மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது போலீசாரின் கடமைதான்.. அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் நான் இருந்தேன்’ என்று விஜய் பதில் சொன்னதாக தெரிகிறது.
ஒருபக்கம் விஜயுடன் நடக்கும் விசாரணை முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேலும் சில நாட்கள் தொடரும் என தெரிகிறது. இன்று விசாரணை முடிந்து விஜய் சென்னை திரும்பிவிட்டாலும் விரைவிலேயே மீண்டும் அவரை சிபிஐ டெல்லிக்கு அழைக்கும் எனத் தெரிகிறது.
ஏனெனில் கரூர் சம்பவம் தொடர்பான அறிக்கையை பிப்ரவரி மாதம் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டிருக்கிறார்கள். எனவே, அதற்குள் முழு விசாரணையை முடிக்கவேண்டும் என்பதால் அவர்கள் விசாரணை தீவிரமடைந்திருக்கிறது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவது தவெகவிற்கு பின்னடைவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் எப்படியும் தவெக நிர்வாகிகள் சரியான ஏற்பாடுகள் செய்யாமல் போனதே முக்கிய காரணம்.. கரூர் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் கூறிய எதையும் தவெக நிர்வாகிகள் கேட்கவில்லை.. எதையுமே அறியாமல்தான் விஜய் இருந்திருக்கிறார் என்பது போலத்தான் சிபிஐ அறிக்கை வெளிய வரும்.,, எனவே இது விஜயின் இமேஜை பாதிப்பதோடு தாவெகவுக்கு அதிகமான வாக்குகள் கிடைப்பதையும் தடுக்கும்’ என அரசியல் விமர்சகர்கள் சொல்ல துவங்கி விட்டார்கள்.









