10,12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைமுறைகள் மாற்றம்..!!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளிகள் மாநில பாடத்திட்டம் இல்லாமல், சிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிபிஎஸ்சி பொதுத் தேர்வு இன்னும் சில தினங்களில் நடக்க உள்ளது. சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்கி, மார்ச் 11ஆம் தேதி வரை நடக்கிறது. தொடர்ந்து, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை நடைபெறுகீறது. இதற்கிடையில், மார்ச் 3ஆம் தேதி நடைபெற இருந்து தேர்வுகள் மட்டும் தள்ளிவைக்கப்பட்டது. அதாவது, அந்த நாளில் நடைபெற இருந்த 10ஆம் வகுப்பு தேர்வு, மார்ச் 11ஆம் தேதிக்கும், 12ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 10ஆம் தேதிக்கும் மாற்றப்பட்டது. 10,12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் மே மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில், பொதுத்தேர்வு எழுதும் 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விதிகளை சிபிஎஸ்இ கடுமையாக்கியுள்ளது. அதன்படி, தேர்வு எழுதும் நடைமுறை, கட்டாய வருகைப் பதிவு, இன்டெர்னல் மதிப்பெண்கள், இரண்டு முறை தேர்வு வாய்ப்புகள் போன்ற விதிகளை சிபிஎஸ்இ கடுமையாக்கியுள்ளது.

2026ஆம் ஆண்டு 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகைப் பதிவில் சிபிஎஸ்இ கடுமையான விதிகளை கொண்டு வந்துள்ளது. 9-10, 11-12ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத இரண்டு ஆண்டுகளும் குறைந்தபட்சம் 75 சதவீதம் வருகைப் பதிவு வைத்திருப்பது கட்டாயமாகும். மேலும், மருத்துவ விடுப்பு போன்றவை வழக்கமான செலுப்படியாகும். ஆனால், அதற்கான ஆவணங்களை முறையாக பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இன்டெர்னல் மதிப்பெண்கள் மிகவும் முக்கியமாக இருக்கிறது. இன்டெர்னல் மதிப்பெண்கள் பொதுத் தேர்வு எழுதுவதற்கு மாணவர்களை தீர்மானிக்கும். அதாவது, பள்ளிகளில் நடத்தும் தேர்வுகள், அசைன்மென்ட், project போன்றவற்றில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் முக்கியம். இந்த மதிப்பெண்கள் வைத்து தான், 10,12ஆம் வகுப்பு தேர்வு எழுத தகுதிபெறுவார்கள் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

2026ஆம் ஆண்டு முதல் 10ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு முறை பொதுத் தேர்வுகளை எழுத வழிவகை செய்யப்படுகிறது. அதன்படி, பிப்ரவரி மார்ச் மாதத்தில் ஒரு தேர்வும், விருப்பப்பட்டால் மே ஜூன் மாதங்களில் மாணவர்கள் தேர்வும் எழுதலாம். இந்த இரண்டு தேர்வுகளில் எந்த தேர்வுகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண்களை எடுக்கிறார்களே அது கணக்கில் கொள்ளப்படும். இரண்டாம் தேர்வுக்கு தகுதி பெற, மாணவர்கள் முதல் கட்ட தேர்வில் குறைந்தது மூன்று பாடங்களை எழுதியிருக்க வேண்டும்.

10,12ஆம் வகுப்பு விடைத்தாளில் சில மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது, சமூக அறிவியல், அறிவியல் பாடங்களுக்கு ஒதுக்கப்பட்ட விடைத்தாளில் மட்டுமே எழுத வேண்ம். ஒதுக்கப்பட்ட தாள்களுக்கு மேல் விடையை சரியாக எழுதினாலும், அதற்கான மதிப்பெண் வழங்கப்படாது என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. தேசியக் கல்விக் கொள்ளை 2020 உடன் இந்த சீர்திருத்தங்கள் பொதுத் தேர்வுகளில் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.