இந்த ஆண்டு மழைக்கு வாய்ப்பு… அக்னி வெயில் குறையலாம் – வானிலை ஆய்வு மையம்

சென்னை: அக்னி வெயில் என்னும் கத்திரி வெயில் மே 4ம் தேதி முதல் தொடங்குகிறது. 29ம் தேதி வரை வெயில் கொளுத்தும் என்றும் அப்போது 108 டிகிரி வரை வெயில் உச்சத்தை தொடும் என்று கணிக்கப்பட்டிருந்தாலும், தற்போது அரபிக் கடல் பகுதியில் இருந்து வீசும் காற்று தடுக்கப்பட்டு தமிழகம் நோக்கி வருவதால், இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த மழை காரணமாக அக்னி வெயில் அதிகரிக்க வாய்ப்பில்லை என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கத்திரி வெயில் காலத்தில் கோடை மழை பெய்ய உள்ளதால் 104 டிகிரியை தாண்டி வெயில் அதிகரிக்க வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஓரிரு இடங்களில் மட்டுமே 100 டிகிரி முதல் 104 வரை செல்லும் வாய்ப்புள்ளது. பெரும்பாலான இடங்களில் 100 டிகிரியாகவே இருக்கும் என்றும் அக்னி நட்சத்திரக் காலத்தில் வெயில் குறைவாக இருக்கும்படி மழை பெய்து குளிர வைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்துள்ளது. வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 104 டிகிரி வரையும், தென் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 102 டிகிரி வரையும், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் 90 டிகிரி வரையும், வட தமிழக கடலோரப் பகுதிகளில் 92 டிகிரி வரையும் வெயில் பதிவாகியுள்ளது.
தற்போது தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று இணையும் பகுதி நிலை கொண்டுள்ளது. மேலும், அரபிக் கடல் பகுதியில் இருந்து வரும் காற்றை தடுக்கின்ற வெப்ப அலை மற்றும் நீரோட்டம் வங்கக் கடல் பகுதியில் நீடிப்பதால் தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் மழை பெய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, இன்று மழை தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஒட்டுமொத்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இன்று நல்ல மழை பெய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. குறிப்பாக திருப்பூர், கோவை, நீலகிரி ஈரோடு கிருஷ்ணகிரி, தர்மபுரி, மாவட்டங்களில் இன்று மதியம் மழை பெய்யத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாலையில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருத்தணி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

இந்த கத்திரி வெயில் காலத்தில் கோடை மழை பெய்ய உள்ளதால் 104 டிகிரியை தாண்டி வெயில் அதிகரிக்க வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஓரிரு இடங்களில் மட்டுமே 100 டிகிரி முதல் 104 வரை செல்லும் வாய்ப்புள்ளது. பெரும்பாலான இடங்களில் 100 டிகிரியாகவே இருக்கும் என்றும் அக்னி நட்சத்திரக் காலத்தில் வெயில் குறைவாக இருக்கும்படி மழை பெய்து குளிர வைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் புழுக்கம், மந்த வெயில், வியர்வை இருக்கும். மே மாதம் முழுவதும் மதியத்துக்கு பிறகு மழை தொடங்கி இரவிலும் மழை பெய்யும். இந்த மழைவது வாரம் வரை தீவிரம் அடைந்து பெய்யும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.