செல்போன் கடைஉடைப்பு வாலிபர்கைது

கோவை மே 7

மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோட்டில் உள்ள மட்டக்கார தெருவை சேர்ந்தவர்சதாம் உசேன் (வயது 32) இவர் மேட்டுப்பாளையம் – சிறுமுகை ரோட்டில் உள்ள பழைய சந்தைப்பேட்டையில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.இவருக்கும் மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோடு ,வ. உ . சி. வீதியைச் சேர்ந்த விஜய் ( வயது 28) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் விஜய் நேற்று முன்தினம் சதாம் உசேனின் செல்போன் கடைக்கு சென்றுதகராறு செய்தார் .பின்னர் கல்லால்கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினார்.சதாம் உசேனையும் தாக்கினார் இதில் அவரது வலது கையில் காயம் ஏற்பட்டது.சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் மகாராஜா வழக்கு பதிவு செய்து விஜயை கைது செய்தார் இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டார்.