CBSE 5,8ம் வகுப்பு மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால் பெயில் – அன்பில் மகேஸ் எச்சரிக்கை.!!

சென்னை: சிபிஎஸ்இ 5,8ம் வகுப்பு மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றால் பெயில் என்பதற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

5,8ம் வகுப்பு மாணவர்களை பெயில் ஆக்குவது பெற்றோர்களுக்கு பெரும் மனஉளைச்சலையும் ஏற்படுத்தும்; மாணவர்கள் கல்வி கற்பதை விட்டே செல்லும் நிலை உருவாகும். தேசிய கல்விக் கொள்கையை சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்படுத்தும்போது பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். சிபிஎஸ்இ பள்ளிகள் கையெழுத்து கேட்டால் பெற்றோர் போட்டுத் தரக்கூடாது. 5,8ம் வகுப்பு மாணவர்களை பெயில் ஆக்கும் முடிவை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினார்.