கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என தனித்தனியாக உள்ளனர்..கோவை சிறையில் கைதிகளின் இறப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாதந்தோறும் 4 கைதிகள் மரணம் அடைகிறார்கள். இந்த நிலையில் நேற்று ஒரு கைதி திடீர் மரணம் அடைந்தார். அவரது பெயர் அலெக்ஸ் (வயது ...
சென்னையில் மூளைச்சாவு அடைந்த 2 பேரின் உடல் உறுப்பு தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. செங்கல்பட்டு வல்லம் பகுதி ஆலப்பாக்கம் காலனியைச் சேர்ந்த பி.சதீஷ்குமார்(33) என்பவர் தலைவலி, கையில் உணர்வின்மை மற்றும் நினைவின்மை காரணமாக போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பக்கவாத அறிகுறிகள் இருந்ததைக் கண்டறிந்த மருத்துவர்கள், தீவிர சிகிச்சை அளித்து ...
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது 100-வது செயற்கைக்கோளான என்விஎஸ்-02-வை இன்று விண்ணில் ஏவுகிறது. இந்த மைல்கல் பணி ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் நடைபெற்றது. இத்தளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட் மூலம் என்விஎஸ்-02 செயற்கைகோள் விண்ணில் பாய்கிறது. இந்த செயற்கை கோளில் ...
பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் பலியானதும், பலர் காயமடைந்துள்ள செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளாவில் செவ்வாய்க்கிழமை வரை 16 நாள்களில் 15 கோடிக்கும் அதிகமான ...
பிரக்யாராஜ்: மவுனி அமாவாசையையொட்டி, உ.பி: பிரயாக்ராஜ் மஹாகும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மருத்துவர் ஒருவர் 15 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் மாறுபட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்றுச்சென்றதாகவும் சிலர் மருத்துவமனை யில் ...
கோவை ஜனவரி 29 சாலை பாதுகாப்பு மாதத்தை யொட்டிகோவை மாநகர காவல் துறை மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் கோவை லட்சுமி மில் சந்திப்பு பகுதியில் நேற்று 100 பேருக்கு இலவச ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .இதற்கு துணை கமிஷனர் அசோக் குமார், கூடுதல் துணை கமிஷனர் சிற்றரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ...
கோவை சிங்காநல்லூர் ஒண்டிப்புதூர் மேம்பாலம் அருகே நேற்று 2 கால்களும் உடைந்த நிலையில் ஒரு மயில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதை அறிந்த சமூக சேவகர் கந்தவேலன் அங்கு சென்று மயிலை மீட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் சிங்கநல்லூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் உயிருக்கு போராடிய மயிலை கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு ...
கோவையில் பல இடங்களில் ரோடு ஓரத்தில் கேட்பாரற்று ஏராளமான கார்கள் கிடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் நகர் முழுவதும் கேட்பாரற்று கிடக்கும் கார்கள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அந்த கார்களில் காவல்துறையினர் நோட்டீஸ் ஒட்டி வருகிறார்கள். காரின் உரிமையாளர்கள் உடனடியாக அந்த கார்களை அப்புறப்படுத்துமாறு காவல்துறை ...
திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் மறுவாழ்வு முகாம் அருகில் ரூ 33.29 கோடியில் திருச்சி கிழக்குத் தொகுதி கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் புதிய கட்டுமான பணி திருச்சி – புதுக்கோட்டை சாலை கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் ரூ 33.29 கோடியில் கட்டப்பட உள்ளது. இந்த புதிய கட்டுமான பணி அடிக்கல் நாட்டு ...
கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள், பொழுதுபோக்கு மன மகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள் தமிழ்நாடு ஓட்டல் சுற்றுலாத்துறை மூலமாக நடத்தப்படும் மதுக்கூடங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல் நாட்டு மதுபான ...












