கோவையை அடுத்த ஆலந்துறை பக்கம் உள்ள ஜாகிர் நாயக்கன்பாளையம், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் செல்லப்ப கவுண்டர். இவரது மனைவி குஞ்சம்மாள் ( வயது 76) இவர் தனியாக வசித்து வருகிறார். கடந்த 4-ம்தேதி இவரது வீட்டில் உள்ள பூஜை அறையில் விளக்கு பற்ற வைத்து சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதமாக விளக்கு தீ ...
கோவை உக்கடம் பகுதியில் சேர்ந்தவர் 17 வயது சிறுமி இவர் பிளஸ் 2 படித்து வந்தார். குடும்பச் சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். இதற்கிடையில் அந்த சிறுமியின் தாத்தா உடல் நல குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனால் தனியாக இருந்த பாட்டிக்கு துணையாக சிறுமி இரவு நேரத்தில் அங்கு தங்கி வந்தார். கடந்த 15ஆம் ...
கோவை : சென்னையில் வக்கீல்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19- ஆம் தேதி போலீசாரால் தாக்கப்பட்டனர். அந்த சம்பவத்தை ஆண்டுதோறும் கறுப்பு தினமாக வக்கீல்கள் கடைபிடித்து வருகிறார்கள். தமிழ்நாடு – புதுச்சேரி வக்கீல்கள் கூட்டுக்குழு முடிவின்படி இன்று ( புதன்கிழமை) கோவையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினார்கள். வக்கீல்கள் பாதுகாப்பு ...
கோவை மாவட்டத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:- சேலம் மாநகர காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரமாதேவி கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராகவும், கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர். மேலும் பேரூர் அனைத்து ...
கோவை சீரநாயக்கன்பாளையம் ,அண்ணா நகரை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் ( வயது 45) கூலி தொழிலாளி. இவரது மனைவி ராணி ( வயது 40) இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் .மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. பன்னீர்செல்வம் குடிப்பழக்கம் உடையவர். தினமும் குடித்துவிட்டு தனது மனைவிடம் தகராறு செய்து வந்தார் . இதனால் ராணி ...
கோவை மாவட்டம் வால்பாறையில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் இன்று காலை வால்பாறை பகுதியில் ஆய்வு மேற்க் கொண்டார் முன்னதாக வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர், உறுப்பினர்கள் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் வால்பாறையில் உள்ள 21 வார்டு நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளில் துறைசார்ந்த அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக சென்று ஆய்வு மேற்கொண்டு ...
கோவை மாவட்ட காவல் துறையின் கீழ் உள்ள ஊர்க்காவல் படையில் பிரதேச தளபதி மற்றும் துணை பிரதேச தளபதி ஆகிய பதவிகள் முறையே 28.02.2025 மற்றும் 04.03.2025 ஆகிய தேதிகளில் முடிவடைகிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கல்வித்தகுதி பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் படித்தவர்களாக இருத்தல் வேண்டும். வயது வரம்பு ...
கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் அரசு மருத்துவமனை தொடர்ந்து புறநோயாளிகள், உள்நோயாளிகள் என தொகுதி முழுவதும் உள்ள மக்கள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கின்றனர். அதற்கு தகுந்தது போல் மருத்துவமனையில் கட்டமைப்பு வசதிகள், சிகிச்சைகள் தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. தினமும் 150 க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் அவர்களோடு உடன் இருப்பவர் என அனைவருக்கும் மூன்று ...
சூலூரில் பிவிசி பந்தல் அமைக்கும் பணியை மேற்கொண்டு வரும் சூலூர் பிஜேபி பிரமுகரின் அண்ணன் புருஷோத்தமன் (வயது 55 ) என்பவர் சூலூர் அருகில் உள்ள செங்கத்துறையில் கண்ணன் என்பவரின் இல்ல விசேஷத்திற்காக பிவிசி பந்தல் அமைத்திருந்தார் நிகழ்வு முடிந்து பந்தலை அகற்றும் பணியினை செய்து கொண்டிருந்தார். பந்தலின் மேலே உள்ள இரும்பு பைபை இறக்கிய ...
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை தெற்கு தெரு ஜமாத், அல் பத்ரு இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பில் 21 ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. இப் போட்டியில் பல ஊர்களைச் சார்ந்த போட்டியாளர்கள் 64 அணிகளாக பங்கேற்றனர். பல கட்டங்களாக போட்டி நடைபெற்று இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற ...













