கோவை மாநகரில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் 40 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டப் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டது. கோவையில் அவிநாசி சாலை, சத்தி சாலை என இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. உக்கடத்தில் தொடங்கி அவிநாசி சாலை ...
நாளை மார்ச் 19ம் தேதி ஆட்டோக்கள் ஓடாது என்று அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. நாளை ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் செயல் தலைவருமான எஸ்.பாலசுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “2013ம் ஆண்டு 1.8 கி.மீ.க்கு ரூ.25, அடுத்தடுத்த ஒவ்வொரு கி.மீ.க்கு ரூ.12 என ...
சென்னை: நாடு முழுக்க விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதங்களை விதிக்க புதிய விதிமுறைகளை மத்திய அரசு அறிமுகம் செய்து உள்ளது. ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த விதிகள் அமலுக்கு வரும். அதே சமயம் மாநில அரசுகள் ஏற்கனவே வேறு வேறு விதிகளை வைத்து இருப்பதால் அவர்கள் இந்த கீழ்க்கண்ட விதிகளை அமல் செய்ய ...
பெங்களூர்: சட்டவிரோதமாகப் போதைப்பொருட்களைக் கடத்திய வெளிநாட்டைச் சேர்ந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரில் அவர்கள் போதைப்பொருளைக் கடத்த முயன்றபோது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்போது அவர்களிடம் ரூ.75 கோடி மதிப்புள்ள 37 கிலோ போதைப்பொருள் இருந்துள்ளது. கர்நாடகாவில் இதுவரை பிடிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தலில் இதுதான் மிகப் பெரியதாகும். இந்தியாவில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க மத்திய ...
லண்டன் மத்திய வங்கியின் டிஜிட்டல் பரிமாற்ற விருதுக்கு இந்திய ரிசர்வ் வங்கி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதை ரிசர்வ் வங்கி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு உள்ளது. அதன்படி, ‘இந்திய ரிசர்வ் வங்கிக் குழுவால் உருவாக்கப்பட்ட பிரவாஹ் மற்றும் சார்த்தி அமைப்புகள் உள்ளிட்ட அதன் முன்முயற்சிகளுக்காக விருதும், அங்கீகாரமும் வழங்கப்பட்டு உள்ளது. இந்த டிஜிட்டல் முயற்சிகள் ...
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவின்பேரில், அந்நாடு யேமனில் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 31 போ் உயிரிழந்தனா். 100-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா். பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் படையினருக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாகப் போா் நடைபெற்று வந்தது. இந்தப் போரில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக யேமனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சிப் ...
சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாக சிக்கியுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு விண்வெளி வீரரான வில்மோா் ஆகியோர் செவ்வாய்க்கிழமை மாலை பூமி திரும்புவார்கள் என்று நாசா அறிவித்துள்ளது. மேலும், அவர்கள் பூமிக்கு திரும்பும் காட்சியை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசா விண்வெளி வீராங்கனையான ...
கோவை மதுக்கரை பக்கம் உள்ள பிச்சனூர், எல்லை மாகாளியம்மன் கோவில் தோட்டத்தை சேர்ந்தவர் செந்தில் வடிவேல் ( 65 ) விவசாயி .இவர் கடந்த 14ஆம் தேதி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை எங்கோ மாயமாகிவிட்டார். இந்த நிலையில் நேற்று அங்குள்ள தோட்டத்து கிணற்றில் செந்தில் வடிவேல் பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அவரது மகன் ...
நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் மலர்கள் காட்சிக்கு வரும் 2025 மே மாதம் நடைபெற இருக்கும் 127வது மலர் காட்சியை முன்னிட்டு இன்காமேரிகோல்டு, பிரன்ச் மேரிகோல்டு போன்ற மலர் நாற்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் (15.03.2025) துவக்கி வைத்தார். பின்னர் ...
இந்திய ரயில்வே பாதுகாப்பு படை டி.ஜி.பி.யாக பதவி வகித்து வருபவர் மனோஜ் குமார் ஐபிஎஸ் .இவர் டெல்லியில் இருந்து இன்று காலை கோவை வந்தார். கோவை ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி எப்) அலுவலகத்திற்கு சென்றார். அவருக்கு ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் அணி வகுப்பு மரியாதை கொடுத்தனர். பின்னர் அதிகாரிகளிடம் ...













