லண்டன் மத்திய வங்கியின் டிஜிட்டல் பரிமாற்ற விருதுக்கு இந்திய ரிசர்வ் வங்கி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதை ரிசர்வ் வங்கி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு உள்ளது. அதன்படி, ‘இந்திய ரிசர்வ் வங்கிக் குழுவால் உருவாக்கப்பட்ட பிரவாஹ் மற்றும் சார்த்தி அமைப்புகள் உள்ளிட்ட அதன் முன்முயற்சிகளுக்காக விருதும், அங்கீகாரமும் வழங்கப்பட்டு உள்ளது. இந்த டிஜிட்டல் முயற்சிகள் ...

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவின்பேரில், அந்நாடு யேமனில் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 31 போ் உயிரிழந்தனா். 100-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா். பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் படையினருக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாகப் போா் நடைபெற்று வந்தது. இந்தப் போரில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக யேமனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சிப் ...

சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாக சிக்கியுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு விண்வெளி வீரரான வில்மோா் ஆகியோர் செவ்வாய்க்கிழமை மாலை பூமி திரும்புவார்கள் என்று நாசா அறிவித்துள்ளது. மேலும், அவர்கள் பூமிக்கு திரும்பும் காட்சியை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசா விண்வெளி வீராங்கனையான ...

கோவை மதுக்கரை பக்கம் உள்ள பிச்சனூர், எல்லை மாகாளியம்மன் கோவில் தோட்டத்தை சேர்ந்தவர் செந்தில் வடிவேல் ( 65 ) விவசாயி .இவர் கடந்த 14ஆம் தேதி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை எங்கோ மாயமாகிவிட்டார். இந்த நிலையில் நேற்று அங்குள்ள தோட்டத்து கிணற்றில் செந்தில் வடிவேல் பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அவரது மகன் ...

நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் மலர்கள் காட்சிக்கு வரும் 2025 மே மாதம் நடைபெற இருக்கும் 127வது மலர் காட்சியை முன்னிட்டு இன்காமேரிகோல்டு, பிரன்ச் மேரிகோல்டு போன்ற மலர் நாற்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் (15.03.2025) துவக்கி வைத்தார். பின்னர் ...

இந்திய ரயில்வே பாதுகாப்பு படை டி.ஜி.பி.யாக பதவி வகித்து வருபவர் மனோஜ் குமார் ஐபிஎஸ் .இவர் டெல்லியில் இருந்து இன்று காலை கோவை வந்தார். கோவை ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி எப்) அலுவலகத்திற்கு சென்றார். அவருக்கு ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் அணி வகுப்பு மரியாதை கொடுத்தனர். பின்னர் அதிகாரிகளிடம் ...

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது சலீம் (30)இவர் கோவை பீளமேடு காந்திமா நகர், எப். சி. ஐ .குடோனில் தனது அண்ணனுடன் தங்கியிருந்து பெயிண்டிங் வேலை செய்து வந்தார். கடந்த 9 – ந் தேதி பெயிண்ட் அடிப்பதற்காக அலுமினிய ஏணியை தள்ளி சென்றார். அப்போது அங்கிருந்த ரயில்வே மின் வயரில் ஏணிப்பட்டு மின்சாரம் தாக்கி ...

கோவை : கரூர் மாவட்டம்,வெள்ளபதி, இந்திரா காலனியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகள் சுகன்யா (வயது 28)கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் இவர் கரூரிலிருந்து கோவைக்கு வந்தார். கோவை உப்பிலிபாளையம் தண்டு மாரியம்மன் கோவில் வீதி அருகே ஒரு வீட்டின் முதலாவது மாடியில் ...

சென்னை: தமிழக பட்ஜெட் தொடர்பாக அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:  அரசு ஊழியர்கள் தொடர்பாக திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை பொய்யாகிவிட்டது. 2026-2027 பட்ஜெட்டில் வெளியிட வேண்டிய சரண் விடுப்பு சலுகை அறிவிப்பை தற்போது வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. அரசு ஊழியர்-ஆசிரியர் சமூகத்தை திமுக அரசு முற்றிலும் புறக்கணித்துள்ளது. ...

ஆந்திராவில் இந்தி திணிப்பு விவகாரத்தில் தமிழக அரசியல்வாதிகள் போலியாக நடந்து கொள்வதாக துணை முதல்வர் பவன் கல்யாண் விமர்சித்துள்ளார். இந்த தலைவர்கள் இந்தியை எதிர்க்கும்போது, நிதி ஆதாயங்களுக்காக தமிழ் திரைப்படங்களை மொழியில் டப்பிங் செய்ய அனுமதிக்கிறார்கள் என்று ஜனசேனா கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். சிலர் ஏன் சமஸ்கிருதத்தை விமர்சிக்கிறார்கள் என்று புரியவில்லை. தமிழக அரசியல்வாதிகள் பண ...