திருச்சியின் மூத்த பத்திரிகையாளரும் அரசியல் சத்ரியன் ஆசிரியர் ஜாகீர் பாய் அவர்கள் மரணம் அடைந்து விட்டார்கள் நியூஸ் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பாக எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம் அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். ...

டிஜிட்டல் கிராப் சர்வே என்ற தொழில்நுட்ப பணி! வருவாய் நிர்வாக ஆணையரை கண்டித்து ஆத்தூர் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்.. டிஜிட்டல் கிராப் சர்வே பணியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் உடனடியாக ஈடுபட வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையர் ஓர் உத்தரவு பிறப்பித்து இருந்தது தொடர்பாக. இந்த உத்தரவை கண்டிக்கும் ...

தமிழ்நாடு அரசு கோரியுள்ள வெள்ள நிவாரணத் தொகையை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி, அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கோரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் “மிக்ஜாம்” புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமழை ஏற்பட்டு, அதன் காரணமாக ...

அமெரிக்காவில் கோவிட் பெருந்தொற்று, பருவகால காய்ச்சல் மற்றும் பிற சுவாச நோய்களின் அதிகரிப்புக்கு மத்தியில், 4 மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகள் மீண்டும் முகக்கவசம் அணிவதை கட்டாயாமாக்கி உள்ளன. நியூயார்க், கலிபோர்னியா, இல்லினாய்ஸ் மற்றும் மாசசூசெட்ஸில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகர சுகாதார ஆணையர் டாக்டர். அஷ்வின் ...

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்களை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்க்கப்படாத காரணத்தால் பேச்சுவாரத்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனையடுத்து வருகிற ...

போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஏற்கனவே கடந்த மாதம் வேலைநிறுத்தம் செய்ய இருப்பதாக நோட்டீஸ் வழங்கியிருந்தார்கள். போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி இருக்க வேண்டும். இன்னும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை அரசு பேசவில்லை. அதேபோன்று காலியாக இருக்கக்கூடிய காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கிட்டத்தட்ட 20000 பணியிடங்கள் காலியாக ...

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவுக்கு, நடிகர் சங்கம் சார்பில் வரும் 19-ம் தேதி இரங்கல் கூட்டம் நடத்தப்படவுள்ளது. தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார். தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. ...

குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஒரு கோடி 6 லட்சம் பேருக்கு மாதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அ இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக ...

பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கெட், எண்ணெய், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டது. 14 பொருட்களுக்கு தடை விதித்து 2018ல் உத்தரவிட்ட ...

கோவையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்றதாக சீல் வைக்கப்பட்ட200க்கும் மேற்பட்ட கடைகளை மீண்டும் திறக்க அனுமதி கோரி கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமாரிடம் தமிழக வியாபாரிகள் சம்மேளன தலைமை கமிட்டி தலைவர் எஸ். எம். பி. முருகன்,பொதுச் செயலாளர் உதயகுமார், பொருளாளர் வெனீஸ்,செயலாளர் சூலூர் குணசிங்,பீளமேடு கிளைச் செயலாளர் தாமஸ் துரை மற்றும் ...