ஆவடி : ஆவடி காவல் ஆணையரகத்தில் காவல்துறையில் பணியாற்றும் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அமைச்சு பணியாளர்களின் வாரிசுகளுக்கு உயர்கல்வி பயில்வதற்கு ஏற்ப தமிழ்நாடு காவலர் சேம நல நிதியிலிருந்து அவர்கள் பயிலும் கல்விக்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் நூற்றாண்டு கல்வி உதவித்தொகை மற்றும் தமிழ்நாடு அரசின் சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ...
திருச்சி மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான ஜமால் முகமது கல்லூரியில் உள்ள வைப்பறைகளில் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், வைப்பறைக்குள் 4 திசைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், வைப்பறைக்கு உள்ளே, வெளியே யாா் சென்று வந்தாலும் கண்காணிக்கும் வகையில் வளாகத்திலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையம் முழுவதும் மொத்தம் 192 ...
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் சென்னை, விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி உள்பட 8 கோட்டங்கள் உள்ளன. இதில், 7,614 சாதாரண மற்றும் மகளிர் கட்டணமில்லா பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர வரையறுக்கப்பட்ட நிறுத்தங்கள், சொகுசு பஸ்கள், விரைவு பஸ்கள் என 2,456 பஸ்களும் புறநகர், விரைவு என 8,628 பஸ்களும், மலைப் ...
மக்களே… கோடை வெயில் முடிந்து தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. வெயிலின் உக்கிரம் அதிகமிருக்கும் என்று பயந்த மக்களுக்கு இந்த மழை இதத்தைக் கொடுத்தாலும், இந்த திடீர் பருவநிலை மாற்றத்தால் திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து இருப்பதாக ...
கோவை: கோவை, மதுக்கரை மஞ்சப்பள்ளம் ஆற்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை, அறிவொளி நகர் பகுதியில் இருந்து மதுக்கரை, நாச்சிபாளையம் வழியாக கேரளம் மாநிலம் செல்லும் வழியில் மஞ்சப்பள்ளம் ஆறு அமைந்து உள்ளது. மழைக் காலங்களில் சுகுணாபுரம், சுந்தராபுரம், ஈச்சனாரி, மதுக்கரை சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர் இந்த ஆற்றில் ...
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வு எழுதிய கொரடாச்சேரி பத்தூர் சிவன் கோவில் தெருவில் வசித்து வரும் மெக்கானிக் பாலா மற்றும் சுதா தம்பதியின் மகளான துர்காதேவி, தமிழ் 96, ஆங்கிலம் 100, கணிதம் 98, அறிவியல் 100, சமூக அறிவியல் 98 என 492 மதிப்பெண்கள் பெற்று ...
கோவை சத்தி ரோடு, சாஸ்திரி நகரை சேர்ந்தவர் பிரபு (வயது 42) இவர் ரத்தினபுரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த வழிப்பறி, கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 12 ஆம் தேதி முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு நேற்று சிறையில் வைத்து திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது . ...
கோவை மே 17 பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் முகம்மது மொய்தீன். இவரது மகன் முகம்மது சம்சுதீன் (வயது 20) கிணத்துக்கடவு கொண்டம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று குழாயில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது மின் வயர் குழாயில் பட்டு மின்சாரம் தாக்கியது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துமனையில் ...
தமிழகத்தில் பரவலாக கோடை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது. இதன்படி, திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை இரவு திடீரென கனமழை பெய்தது. நள்ளிரவுக்கு மேல் தொடங்கிய மழையானது வியாழக்கிழமை காலை வரை பரவலாக அனைத்து இடங்களிலும் பெய்து பூமியைக் குளிரச் செய்தது. மழையானது கடந்த சில நாள்களாக அனலில் தவித்த மாவட்ட மக்களை பெரிதும் மகிழ்ச்சியில் ...
யூடியூப் சேனலில் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேனியில் தங்கியிருந்த அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே அதே சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்டம் முசிறி போலீஸ் டிஎஸ்பி ...













