தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தான் இன்று அதிகாலை மூன்றரை மணிநேரம் இடி – மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தூத்துக்குடி நகரில் பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தூத்துக்குடி உள்பட தமிழ்நாடு முழுவதும் தற்போது வெயில் என்பது ...

சென்னை: உரிய அனுமதியின்றி நடைபெறும் போராட்டங்கள் அவ்வப்போது நடக்கிறது. இதற்கிடையே அனுமதியின்றி போராட்டம் நடத்தப்படுவது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்திற்குச் சுமை ஏற்படுத்துவதை விடுத்து உடனடி அபராதம் விதிக்கலாமே என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசு யோசனை தெரிவித்துள்ளது. பொதுவாகப் போராட்டம் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்போது முன்கூட்டியே அது தொடர்பாக போலீசாரிடம் அனுமதி கோரி ...

சென்னை: கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் தகன மண்டபம் கட்டப்பட்டுள்ள விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் கோவை மாவட்டம் இக்கரை போளுவாம்பட்டியில் கால பைரவர் தகன மண்டபம் என்ற பெயரில் மின் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த ...

தொடர்ந்து அழுத்தம் கொடுத்தும், பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் திமுக அரசு கண்டுக்கொள்ளாமல் இருப்பதால் நாளை உண்ணாவிரத போராட்டத்தை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளது. கடந்த முறை நாங்கள் போராடிய போதெல்லாம், எதிர்கட்சியாக இருந்த திமுக, எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, உங்க போராட்டத்தில் நியாயமிருக்கு என்று கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும், ‘சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளில் பழைய ...

கோவை ரத்தினபுரி, மேஸ்திரி மாரப்பன் வீதியைச் சேர்ந்தவர் மனோஜ் குமார். இவரது மனைவி சோனாலி ( வயது 28 )இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் நேற்று இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின்விசிறியில் சால்வையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து ...

தமிழ்நாட்டில் சில இடங்களில் நேற்று மழை பதிவாகியிருந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று ( சனிக்கிழமை) தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த வகையில் இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழையும் நீலகிரி ,கோவை திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி தர்மபுரி ...

டெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தபோது நீதிபதியின் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் யஷ்வந்த் வர்மா. ...

கேரள மாநிலம் ,மலப்புரம் மாவட்டம் ஆதலூர் திப்பலூர் பக்கம் உள்ள பரம்பாது படியை சேர்ந்தவர் ஹரிதாசன் ( வயது 39) சினிமா துணை நடிகர்.இவர் கடந்த ஒரு வாரமாக மருதமலை உக்கடம் உட்பட பல்வேறு இடங்களில் நடைபெறும் மலையாள சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மருதமலை அடிவாரத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருந்தார்.அவருக்கு நேற்று ...

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும் பொருட்கள் கடத்தலை தடுக்க குடிமை பொருள் குற்றபுலனாய்வு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக கோவையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தீவிரமாக சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது .இந்த பிரிவின் கோவை மண்டலம் அலுவலகம் கோவையில் உள்ளது கோவை மண்டலத்தின் ...

போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி ஹைகோர்ட் மகாராஜாவை சென்னை கிண்டியில் போலீசார் சுட்டுப் பிடித்தனர். தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஹைகோர்ட் மகாராஜா மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. காவல்துறை தன்னை தேடுவதை தெரிந்து ஹைகோர் மகாராஜா கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில், ...