கோவை ஜூலை 26சுதந்திரமான வாழ்க்கைக்கு எதிரான 3 சமஸ்கிருத சட்டங்களை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்களின் சங்கங்களின் நடவடிக்கை குழு ( ஜெ.ஏ.ஏ.சி) சார்பில் டெல்லியில் நடைபெற உள்ள பேரணியில் பங்கேற்க கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளர் சுதீஷ் தலைமையில் 70 வழக்கறிஞர்கள் இன்று காலையில் கோவை ரயில் நிலையத்திலிருந்து ரயில் ...

சென்னை : கடந்த 2022 ஆம் ஆண்டு சிறந்த சேவை வழங்கிய காவல் நிலையங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டு தமிழ்நாடு காவல்துறை இயக்குனர்/ படைத்தலைவர் சங்கர் ஜீவா ல் மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் 1.திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காவல் நிலையம் 2. பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் காவல் நிலையம் 3. அரியலூர் மாவட்டம் அரியலூர் காவல் நிலையம் ...

திருச்சி மனச்சநல்லூரை சேர்ந்த சுய உதவிக் குழுவின் தலைவியாக உள்ளவர் கடன் தொல்லையால் தனது மகன் மகள் ஆகியோரை தூக்கிட்டு கொலை செய்துவிட்டு சேலையால் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான் இறந்தால் தனது குழந்தைகள் தாயில்லாமல் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக அந்த பெண் இந்த முடிவை எடுத்துள்ளதாக ...

கோவை அருகே உள்ள இருகூர், நாராயணசாமி லே – அவுட்டை சேர்ந்தவர் சுவாமிநாதன். இவரது மகன் அந்தோணி சந்தோஷ் (வயது 24) இவர் நேற்று முன்தினம் இரவில் ஒண்டிப்புதூர் காமாட்சிபுரத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலைதடுமாறி ரோட்டில் உள்ள தடுப்புச் சுவரின் பைக் மோதி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த ...

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், ஒருசில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, ...

பவானி : கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பீகார், சப்ராவை சேர்ந்த முகமது சகாபுதீன் மகன் ஆரிப்ராஜ் (30), கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த முகமது யாசின் மகன் முகமது சாபுதீன் (50), மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த சுல்தான் மைதின் மகன் மாலிக் பாட்ஷா (22), ஆகியோரை சென்னை அறிவுரை குழுமம் முன்பாக ஆஜர்படுத்த கோவை ...

அரசுப் பேருந்தில் பெண் பயணி தவறவிட்ட ரூ.20 ஆயிரத்தை சம்பந்தப்பட்டவரிடம் ஒப்படைத்த ஓட்டுநா், நடத்துநரை அரசுப் போக்குவரத்துக் கழக கோவை கோட்ட மேலாண் இயக்குநா் ஜோசஸ் டயஸ் பாராட்டினாா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோவை மண்டலம், கருமத்தம்பட்டி கிளையில் இருந்து சோமனூா் – காந்திபுரம் வழித்தடத்தில் இயக்கப்படும் 20 ஏ அரசுப் பேருந்தில் ஓட்டுநா் ...

ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் முன்னேற்றத்தை கருத்தில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த மக்கள் நலத்திட்டங்கள் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். புதிதாக தொழில் தொடங்க விரும்புவோருக்கு உதவி செய்யும் வகையில் மத்திய அரசு தொடங்கிய திட்டம் தான் பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டம். கடந்த ...

நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக கேரள மாநில எல்லையையொட்டி உள்ள தென்காசி மாவட்டத்தில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதிப்பால் சமீபத்தில் உயிரிழந்தார். அம்மாநிலத்தில் மேலும் சிலருக்கு நிபா வைரஸ் ...

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் 19 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஓடுபாதையிலேயே விபத்துக்குள்ளானது. காத்மாண்டு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 19 பயணிகளுடன் புறப்பட்ட சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் ஓடுதளத்தில் சென்ற நிலையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. 19 பயணிகளுடன் ஓடுபாதையில் சறுக்கி விபத்துக்குள்ளான விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் 18 பேர் ...