கோவை ரத்தினபுரி இந்திரா நகரை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி மெர்சி ( வயது43) இவர் நேற்று அவரது வீட்டில் விஷ மாத்திரைகளை தின்று மயங்கி கிடந்தார் . அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார். இது குறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் ...

தமிழ்நாடு கேரளா மாநிலங்களுக்கு இடையான எல்லை ஒருங்கிணைப்பு கலந்தாய்வு கூட்டம் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன், கேரள போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். கோவை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர்.சுரேஷ், கேரளா பாலக்காடு உதவி காவல் கண்காணிப்பாளர் அஸ்வதி ...

டெல்லியில் CSR யுனிவர்ஸால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக தாக்க மாநாடு மற்றும் விருதுகளின் (SICA) 4வது பதிப்பில், நிலையான சுற்றுச்சூழல் பிரிவில், 2024 க்கான சமூக அக்கறை விருது சிறுதுளிக்கு வழங்கப்பட்டுள்ளது. 450க்கும் மேற்பட்ட சமூக செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்ட விருதுக்கான தேர்வில் சிறுதுளி இந்த தேசிய அங்கீகாரத்தைப் பெற்றது என்றனர் மேலும் தமிழ்நாட்டிலிருந்து இரண்டு ...

திருவள்ளூர் : மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் நாளை சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 21.9.2024 மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மின் வாரிய சேர்மன் ராஜேஷ் லக்கானி ஆகியோர் இணைந்து தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள பாமர மக்களும் ...

திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி, செப்டம்பர், 6ம் தேதி முதல், 17ம் தேதி வரை, 12 நாட்களில் மட்டும், இதுவரை இல்லாத வகையில், 818.21 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.கேரளாவில் ஓணம் திருவிழா புகழ் பெற்ற ஒன்று. கேரள மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வர். இந்நிலையில் கேரளாவில் ஓணம் பண்டிகையின் எதிரொலியாக மதுபானங்கள் ...

அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ், புதன்கிழமை (செப்டம்பர் 18) தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை அதிரடியாக 0.50 சதவீதம் குறைத்துள்ளது. இது கொரோனா பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து முதல் முறையாக வட்டி விகிதம் குறைக்கப்படுவதால், இது அமெரிக்க முதலீட்டுச் சந்தைக்கு மட்டும் அல்லாமல் சர்வதேசச் சந்தைக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது.வேலைவாய்ப்பு நிலைமை மற்றும் விலைவாசி உயர்வு ...

லெபனானில் பேஜர்கள் வெடிப்பு நடந்த ஒரு நாளுக்கு பிறகு வாக்கி-டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழந்தனர். லெபனானில் நூற்றுக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்ததில் 12 பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில் பேஜர்கள் வெடிப்புகள் நிகழ்ந்த ஒருநாள் கழித்து ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த பல வாக்கி டாக்கி சாதனங்களும் வெடித்துள்ளன. இதில் 20 பேர் கொல்லப்பட்டதாகவும் ...

பெரம்பூர்: லொக்கேஷனுக்கு வராத ஆத்திரத்தில் பெண் புகார் அளித்ததால் உணவு டெலிவரி வேலையை பகுதிநேரமாக செய்து வந்த கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கொளத்தூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொளத்தூர் வரலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவர் பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். இவரது மூத்த மகன் பவித்திரன் (21), வியாசர்பாடியில் உள்ள ...

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் உள்ளது இங்கு சுரங்கம் 1, சுரங்கம் 1 விரிவாக்கம், சுரங்கம் 2 என மூன்று திறந்தவெளி சுரங்கம் மூலம் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின் உற்பத்தி செய்து வருகின்றனர் இதில் 8000 நிரந்தர தொழிலாளர்களும் பத்தாயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ...

கோவை ராமநாதபுரம், ,80 அடி ரோடு, காவேரி நகரில் வசிப்பவர் லட்சுமணன். இவரது மனைவி கோவிந்தம்மாள் ( வயது 49) இவர் பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தார். இவரது சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூர். நேற்று இவர் சிங்காநல்லூர் சென்ட்ரல் ஸ்டுடியோ ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் முதல் மாடியில் நின்று பெயிண்ட் அடித்துக் ...