கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள வெங்கிட்டாபுரம் நேதாஜி காலனியை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 30) இவர் வீட்டை பூட்டி விட்டு வழக்கமாக சாவியை மீட்டர் பெட்டியின் மேல் வைத்து விட்டு செல்வார் . இந்த நிலையில் கடந்த 20- ஆம் தேதி இவர் சாவியை மீட்டர் பெட்டியில் வைத்து விட்டு வேலைக்கு சென்று விட்டார். அப்போது ...
கோவை மாவட்டம் வால்பாறை ஊசிமலை மட்டத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி வினிதா ( வயது 23) இவர்களுக்கு பிறந்து 38 நாட்களான விக்னேஸ்கரன் என்ற ஆண் குழந்தை உள்ளது. நேற்று இந்த குழந்தைக்கு பவுடர் பால் கொடுத்துவிட்டு தூங்க வைத்தார்.சிறிது நேரத்தில் குழந்தைக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. வால்பாறை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் ...
கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது .இது பக்தர்களின் 7-வது படை வீடாக கருதப்படுகிறது. இங்கு தமிழ்நாடு மட்டும் அல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கிறார்கள்.இந்த நிலையில் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. மொத்தம் 14 பொது உண்டியல்களில் ரூ. 90 ...
நீலகிரி மாவட்ட உதகை 18ஆவது வார்டு பகுதி எலிகள் முருகர் கோவில் அருகே பல வருடங்களால் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த குடிநீர் கிணற்றை சரி செய்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் குறைபாடுகளிலிருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு நகர மன்ற உறுப்பினர் கே முஸ்தபா தொடர்ந்து நகரமன்ற கூட்டத்தில் வலியுறுத்தி கூறி வந்ததின், எல்க்கில் முருகர்கோவில் பகுதியில் ...
திருச்சி சர்வதேச விமான முனையத்தின் உள்ளே ஆட்டோக்கள் செல்ல அனுமதிக்க கோரி ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சங்கத்தின் மாவட்ட தலைவர் சிவா தலைமையில் நடைபெற்றது. திருச்சி விமான நிலையம் எதிரில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டு அருகே அனைத்து திருச்சி ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க நிர்வாகிகள் ஒருங்கிணைந்து இந்த கண்டன ஆர்பாட்டம் ...
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர் உதவித் தொகையை இருமடங்காக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகை, மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகை ரூ.1,000 என்பதை ரூ.1,500 ஆகவும் உயர்த்தி வழங்கினார்கள். அத்துடன், தற்போது, ...
திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலந்ததாக கூறப்படும் புகார் தொடர்பாக நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க கோரி விஜயவாடா உயர்நீதிமன்றத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது… திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பை ஜெகன் மோகனின் அரசு கலந்ததாக ஆந்திர முதல்வர் ...
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த வாரம், ஈரோடு அம்மா பேட்டையை சேர்ந்த கட்டிட தொழிலாளியான செந்தில் குமார் (வ45) தனது நண்பருடன் மது குடிக்கும் போது போதையில் ஏற்பட்ட தகராறில் ,நண்பர் ஏர்கன்துப்பாக்கியால் சுட்டதில் வலது கால் தொடையில் குண்டு துளைத்தது . இதை தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ...
கோவை அருகே உள்ள போத்தனூர் சீனிவாசன் நகரை சேர்ந்தவர் தயாளன் ( வயது 42 )இவர் நேற்று தனது நண்பர்களுடன் பொள்ளாச்சி பக்கம் உள்ள குளத்தூர் கன்னிமார் கோவில் ஆற்றில் குளிக்க சென்றார் .குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து அவரது ...
கோவை சிங்காநல்லூர் சார் – பதிவாளர் அலுவலகம் வெள்ளலூரில் உள்ளது. இங்கு சார் -பதிவாளராக நான்சி நித்யா கரோலின் பணியாற்றி வருகிறார்.இங்கு பத்திரங்கள் பதிவு செய்ய லஞ்சம் வாங்கப்படுவதாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு திவ்யா தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் ...













