கோவை கரும்புக்கடை, ஞானியார் நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பாரிஸ் அகமது ( வயது 24 ) டிரைவர். இவரது மனைவி ஷர்மிளா (வயது 21) இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. பாரிஸ் அகமதுவின் சகோதரி மகன் ஹாயான் அகமது( வயது 8) தனியார் பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் ...

பயணிகள் டிக்கட் பதிவு, பார்சல் சேவை பதிவு உட்பட அனைத்து ரயில்வே சேவைகளையும் ஒரே செயலியில் பெறும் வகையில், ‘சூப்பர் மொபைல் ஆப்’ அடுத்த மூன்று மாதங்களில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ரயில் பயணத்துக்கு 85 சதவீதத்துக்கும் மேற்பட்ட பயணியர், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாக, ...

கோவை போத்தனூர்,வெள்ளலூர் ரோட்டில் உள்ள சித்தன்னாபுரத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 39 ) இவர் அரசு போக்குவரத்து கழகம் உக்கடம் கிளையில் கடந்த 10 ஆண்டுகளாக கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 1- ந் தேதி வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு ...

கோவையில் நேற்று ஒரே நாளில் மாணவி உட்பட 4 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது . அதன் விவரம் வருமாறு:- நீலகிரி மாவட்டம் , லவ்டேலை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மகள் கனகவல்லி (வயது 19) கோவை பாப்பநாயக்கன்பாளையம், நேதாஜி ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்து அங்குள்ள ...

டெல்லி: பத்திரிகையாளர்கள் அரசாங்கத்தை விமர்சிப்பது சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், ஜனநாயக நாடுகளில் ஒருவரின் கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம் மதிக்கப்படுகிறது. நாட்டில் கருத்துச் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என்றும், பத்திரிகையாளர் கைது செய்யப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19 (1) (a) பிரிவின் கீழ் பத்திரிகை ...

சென்னை: பாஸ்போர்ட் சேவை இணையதளம் நேற்று இரவு 8 மணி முதல் இயங்கவில்லை. பாஸ்போர்ட் சேவை இணையதளம் வரும் திங்கட்கிழமை (அக்டோபர் 7) காலை 6 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. passportindia.gov.in என்ற பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் தொழில்நுட்ப பராமரிப்பு பணி நடைபெறுவதால் சேவை முடங்கியுள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ், நாடு முழுவதும் பாஸ்போர்ட் ...

தாம்பரம்: தாம்பரம் மாநகர காவல் தாம்பரம் காவல் மாவட்டம் கூடுவாஞ்சேரி காவல் சரகம் பீர்க்கன்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று கிடந்த மற்றும் கைவிடப்பட்ட 50 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் 12.10.23 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பீர்க்கன்கரனை காவல் ...

தென்னக ரயில்வே திருச்சி கோட்டம் சார்பில் திருச்சி ரயில்வே மியூசியம் அருகே ரெஸ்டாரென்ட் ஆன் கோச் ரயில் பெட்டி உணவகம் நேற்று புதிதாக திறக்கப்பட்டது. இந்த உணவகத்தை ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் மற்றும் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். இதில் திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். ...

வாஷிங்டன்: சமூக வலைத்தளங்கள் பார்வையாளர்களைத் தக்கவைக்க பல்வேறு முயற்சிகளைத் தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. இதற்கிடையே பொதுமக்களிடையே பிரபலமாக உள்ள யூடியூப் ஷார்ட்ஸில் மிக முக்கிய மாற்றம் வரவுள்ளது. அதாவது ஷார்ட்ஸின் அதிகபட்ச நீளம் 60 நொடியில் இருந்து 180 நொடிகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நவீனக் காலத்தில் சமூக வலைத்தளங்கள் நமது வாழ்க்கையில் மிக முக்கியமானதாக மாறிவிட்டது. ...

கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அந்த ரோட்டில் மழை நீர் வடிகாலை ஆக்கிரமித்து கடைகள் முன் பொருட்கள் வைத்து செட்டுகள் அமைத்து இருப்பதால் அடிக்கடி நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதை தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் சிவ குரு பிரபாகரன் அந்த சாலையில் உள்ள ஆக்கிரமப்புகளை ...