வாஷிங்டன்: அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ள டிரம்ப் பிறப்புரிமை அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமையை அதிபராகப் பதவியேற்ற முதல் நாளே ரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ளார். இது தற்போது அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களின் தலையில் இடியாக இறங்கி உள்ள நிலையில் டிரம்பின் இந்த அறிவிப்பால் அமெரிக்காவில் 16 லட்சம் இந்தியர்கள் குடியுரிமையை இழக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் ...
வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் நிறைவேற்றப்படாமல் போனது குறித்து சட்டப்பேரவையில் பாமக உறுப்பினர் ஜி.கே.மணி பேசியதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கையில், அந்த சட்டம் நிறைவேற்றப்படாமல் போனதற்கு யார் மீது தவறு என்பதை விளக்கிக் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கை மீது நேற்று விவாதம் நடைபெற்றது. அப்போது ஜி.கே.மணி (பாமக) ...
திருவண்ணாமலை மகா தீபத்தன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதியில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மிக முக்கிய திருவிழாவான உலகப் புகழ் பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. வருகிற 13ஆம் தேதி கோயில் கருவறையில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அன்றைய தினம் மாலை 2,668 அடி உயர மலையின் ...
சென்னை: தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிகள் இயங்கலாம் ஆனால் விதி மீறலில் ஈடுபடக் கூடாது. உரிய உரிமம், மூன்றாம் நபர் காப்பீடு உள்ளிட்ட ஆவணங்களுடன்தான் இயக்க வேண்டும். பைக் டாக்ஸிகள் விதிமீறல்களில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவே தணிக்கைக்கு உத்தரவிட்டுள்ளோம் என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். பைக் டாக்ஸி என்பது தமிழ்நாடு அரசு மட்டும் முடிவெடுக்கும் விஷயம் அல்ல. ஒன்றிய ...
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2ம் நாளாக இன்று நடைபெற்று வருகிறது. நேற்று, மதுரை டங்ஸ்டன் சுரங்க ஆலை அமைக்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு திட்டத்திற்கு எதிரான சட்ட மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது. தற்போது சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்களும், முதல்வரும் பதில் அளித்து வருகின்றனர். ...
பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கம் அதன் ஒரே நாடு ஒரே தேர்தல் முன்முயற்சியுடன் முன்னேறி வருவதாகவும் நடப்பு கூட்டத்தொடரில் ஒரு மசோதாவை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்த தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற ராம்நாத் கோவிந்த் கமிட்டியின் அறிக்கைக்கு அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது மேலும் பரந்த ...
கோவை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இரா.மோகன் உடல்நல குறைவால்கோவை ராமநாதபுரம், கருணாநிதி நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலையில் மரணம் அடைந்தார். இவர்1980 ஆண்டு கோவை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகவும்,1989 -ஆம் ஆண்டில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் பணியாற்றி, பொதுமக்களுக்கு பல்வேறு வளர்ச்சிப் பணிகளைச் செய்து, பொதுமக்களின் அன்பு, நன்மதிப்பைப் பெற்றவர்.முத்தமிழறிஞர் கலைஞரின் ...
சென்னை: மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டியில் மாநில அரசின் அனுமதி இல்லாமல் தனியார் நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்கிய டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய கோரி, சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தனி தீர்மானம் அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது. மக்களுக்கு நல்ல செய்தி வரும் என பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் தமிழக ...
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்த 20 நாள்களில் கடந்த பிப்ரவரி மாதம் வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் பதவி பெற்றவர் ஆதவ் அர்ஜுனா. ‘வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் (Voice Of Commons)’ எனும் தேர்தல் வியூக நிறுவனத்தின் மூலம் மாநாடுகளை ஒருங்கிணைப்பது, தேர்தல் வியூகங்களை வகுப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகிறார். 2021 தொடக்கத்திலிருந்து வி.சி.க-வின் ...
மாஸ்கோவில் நடைபெற்ற 15ஆவது விடிபி ரஷிய முதலீட்டு மாநாட்டில் பிரதமர் மோடியின் கொள்கை மற்றும் மேக் இன் இந்தியா திட்டம் ஆகியவற்றை ரஷிய அதிபர் புதின் பாராட்டினார். வளர்ச்சிக்கான நிலையான சூழலை உருவாக்க இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளை பாராட்டிய அதிபர் புதின், இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்தக் கொள்கைகள் எவ்வாறு பங்களித்துள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினார். உற்பத்தியை ...













