டெல்லி: அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் “முதிர்ச்சியை” காட்டினர் என்றும், பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் போது பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு இருப்பதை அவர்கள் ஒப்புக்கொண்டதாகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22 ...

பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்து 5 நாட்களுக்குப் பிறகும், பாகிஸ்தான் இன்னும் பெரிய தாக்குதல் நடத்தப்படலாம் என அஞ்சி நடுங்குகிறது. இந்த பயம் அவர்களது செயல்பாடுகளில் பிரதிபலிக்கிறது. இப்போது பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் பிரிவு 144 விதிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், இஸ்லாமாபாத்தில் பெரிய கூட்டங்களின்  தொடர்கிறது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் மட்டும் தினமும் ...

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 இந்திய சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு தீவிரமடைந்துவருகிறது. இதற்கிடையே சிந்து நதி நீரை தடுத்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்போவதாக இந்தியா தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், நேற்று பாகிஸ்தான் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் ஜீலம் ஆற்றில் இந்தியா திடீரென தண்ணீரை வெளியேற்றியதாக பாகிஸ்தான் ...

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பம் நாட்டல் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன், இந்த தாக்குதலுக்குப் பின்னர் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மீண்டும் பதற்றங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், முப்படைகளின் தலைமைத் தளபதி (CDS) ஜெனரல் அனில் சவுகான், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை டெல்லியில் ...

பொன்முடியின் பதவி விலகல், தமிழ்நாடு முழுவதும் அதிமுக மக்கள் சக்தியை திரட்டி நடத்திய மாபெரும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி, என அதிமுக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களைப் பற்றி மிகவும் அருவருக்கத்தக்க சிறுமையான பார்வை கொண்ட பொன்முடிக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் அதிமுக மக்கள் சக்தியைத் திரட்டி நடத்திய மாபெரும் போராட்டத்திற்கு ...

தமிழக அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளார். சர்ச்சை பேச்சால், அமைச்சர் பொறுப்பிலிருந்து பொன்முடி மாற்றம் செய்யப்பட்டு, தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் தமிழக அமைச்சர்கள் சிவசங்கர், ராஜ கண்ணப்பன், முத்துசாமி ஆகியோரிடம் மாற்றப்பட்டவர்களின் துறைகள் பிரித்து தரப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றத்தின் கண்டன உத்தரவைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா ...

அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல் படுத்துவது தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின்னர் பணிகாலத்தில் பெற்ற ஊதியத்தில் குறிப்பிட்டப் பங்கை ஊழியர் மரணிக்கும் வரை ஒவ்வொரு மாதமும் வழங்கும் முறை தான் பழைய ஓய்வூதியத் திட்டம். பழைய ஓய்வூதியத் ...

சென்னை: விஜய் தனது கட்சியில் குழந்தைகள் அணி என்பதை தவிர்க்க வேண்டும். கட்சியில் உள்ள குழந்தைகள் விஜய் பின்னால் வந்து படிப்பதை நிறுத்தி விடக்கூடாது என்று தமிழிசை கூறியுள்ளார்.தமிழக பாஜ முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று அளித்த பேட்டி: காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு நாம் எல்லோரும் மனம் வருந்தி நின்று கொண்டிருக்கிறோம். நேற்று முன்தினம் ...

சென்னை: திருமாவளவன் ஒரு கூட்டணியில் இருக்கிறார். அவர் எப்படி அதிமுக கூட்டணி கதவை அடைக்க முடியும் என்று பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடியின் 121வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, தமிழக பாஜ சார்பில் அக் கட்சியின் மாநில செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் சென்னை திருவல்லிக்கேணி ...

கோவை: தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கோவை வருகை அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. விஜய் ரோடு ஷோ நடத்தியது போலவே, உதயநிதி ஸ்டாலினும் ரோடு ஷோவில் ஈடுபட்டார். அவிநாசி சாலை முழுவதும் இரு கட்சிகளின் கொடிகளே நிறைந்திருந்தன. ஏற்கனவே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தவெக ...