திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்து மின்தடை ஏற்பட்டது. இதில், சிந்து பூந்துறை பகுதியில் மாநகராட்சி எரிவாயு தகனமேடை அருகே மரம் முறிந்து மின்தடை ஏற்பட்டது. இதில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாதததால், தகனம் செய்ய கொண்டு ...
இந்தியா கூட்டணி வலுவாக இருக்க வேண்டும்” என்று நான் ஆசைப்படுகிறேன். ஆனால், துரதிஷ்டவசமாக இந்தியா கூட்டணி கவலைக்கிடமாக உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ப. சிதம்பரம், “இந்தியா கூட்டணியின் எதிர்காலம் பிரகாசமானதாக இல்லை” என்றும், “இந்த கூட்டணி இன்னும் உறுதியுடன் ...
சென்னை: சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா எங்களை அழைக்காதது வருத்தம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட ஓபிஎஸ், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் அமித்ஷா சென்னை வந்த போது எங்களை அழைத்து பேசாதது வருத்தமே என தெரிவித்திருந்தார். ...
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸ் தலைமையில் இன்று(மே 16) மாவட்ட தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் சில மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள நிலையில், அன்புமணி ...
சென்னை: திட்டமிட்டப்படி ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கும். அதில் எந்த மாற்றம் இல்லை என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா என்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ...
நீலகிரி மாவட்டத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் தெப்பக்காடு யானைகள் முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு குடியிருப்புகளுடன் கட்டப்பட்டுள்ள யானை பாகன்களுக்கான மாவூத் கிராமத்தைத் திறந்து வைத்தார், முதுமலை புலிகள் காப்பகத்தில் தமிழகத்திலேயே முன்னோடியாக 15 கி.மீ. நீளத்திற்கு தொரப்பள்ளி முதல் தெப்பக்காடு வரை அமைக்கப்பட்டுள்ள வான்வழி தொகுப்பு கம்பிகளின் (Aerial Bunched Cable) சேவைகளைத் ...
அமெரிக்கா குடிமகன்கள் தவிர மற்றவர்கள் பணம் அனுப்பினால் 5% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவை சேராதவர்கள் அமெரிக்க குடிமகன்களாக இல்லாதவர்கள் அதாவது எச்1பி விசா மற்றும் கிரீன் கார்டு வைத்திருந்தாலும் கூட வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும்போது 5% பரிமாற்ற வரியை செலுத்த வேண்டும் என்று அமெரிக்க ...
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘தமிழக கவர்னர் வழக்கு மற்றும் பிற முன்னுதாரணங்களில் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் தீர்த்து வைத்த அரசியலமைப்பு நிலைப்பாட்டைத் தகர்க்க முயற்சிக்கும் மத்திய அரசு, ஜனாதிபதியின் கடிதத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். மக்களின் ஆணையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் பா.ஜ.க.வின் கட்டளைப்படி தமிழக கவர்னர் செயல்பட்டார் என்பதை இந்த முயற்சி ...
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நகராட்சி நகராட்சி சமுதாயக் கூடத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 171 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் க.கிரியப்பனவர் வழங்கினார் இம்முகாமில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் (பொ) விஸ்வநாதன், வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர், நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர ...
நாட்டையே உலுக்கிய பொள்ளச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நேற்று குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வெளியானது. குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி நிவாரண தொகை அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் தலா ரூ.25 லட்சம் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது- ...













