சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானாதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். ‘நாராயணன் விஜயராஜ் அழகர்சுவாமி’இது தான் விஜயகாந்தின் இயற்பெயர். 1952-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி மதுரை திருமங்கலத்தில் கே.என்.அழகர்சாமி நாயுடு, ஆண்டாள் அழகர்சாமி தம்பதிக்கு மகனாக பிறந்தார். நடிப்பில் அதிக ஆர்வம் கொண்டிருந்த அவர், ...
சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேமுதிக தலைவர், மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் காலமானார் என்ற செய்தி, மிகுந்த வருத்தமும் மனவேதனையும் அளிக்கிறது. தென்தமிழகத்தில் பிறந்து, தென்னிந்தியத் திரையுலகையே கட்டியாண்ட பெருமைக்குரியவர். ஏழை எளிய தொழிலாளர்களின் பசிப்பிணி போக்கிய ...
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட நிர்மலா சீதாராமன் கோயில் அர்ச்சகர்களுக்கான ஊதியத்தை ரேசன் போல அளந்து கொடுப்பதாக தமிழ்நாடு அரசை விமரிசித்துள்ளார், தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயில் அர்ச்சகர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்து கோயில் நிர்வாகிகளிடம் கேட்டறிந்த ...
புதுடெல்லி: மது மற்றும் போதை பொருட்கள் பழக்கத்துக்கு எதிராக மிகப்பெரிய இயக்கத்தை தொடங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். தேசிய வீர பாலகர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லியில் உள்ள பாரத்மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: சீக்கியர்களின் 10-வது குரு கோவிந்த் சிங்கின் இளையமகன்கள் ...
நன்னிலம்: திராவிட பாரம்பரியத்தால் ஏழைகள், ஏழைகளாகவே உள்ளனா் என குற்றஞ்சாட்டி பேசினாா் பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை. பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தமிழகத்தில் மேற்கொண்டுள்ள என் மண், என் மக்கள் எனும் நடைப் பயணத்தின் (பாத யாத்திரை) ஒரு பகுதியாக திருவாரூா் மாவட்டம், நன்னிலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நடைப் பயணத்தில் அவா் ...
சென்னை: எனக்கு வாக்களித்த மக்களுக்காக நான் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்றேன் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். தூத்துக்குடியில் நான் ஆய்வுக்காக போகவில்லை என்றும் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். தென் மாவட்டங்களில் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட வந்த தமிழிசை சௌந்தரராஜன், தமிழக அரசு குறித்து செய்தியாளர்களிடம் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ...
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உயிரிழந்தார் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்* உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும் சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தே.மு.தி.க தலைமை கழகம் இன்று காலை அறிவித்திருந்தது. இந்த நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு விஜயகாந்த் ...
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : சென்னையில் இன்னொரு பகுதியில் அமோனியம் வாயு கசிவு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வரும் காலங்களில், இதுபோன்ற நிகழ்வு நடக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இதுபோன்று இயற்கை பேரிடர்கள் ஏற்படுவது முதல் முறையல்ல, பலமுறை ...
திருச்சியில் செய்தியாளர்களிடம் வைகோ கூறும்போது 2015-ல் மழை வெள்ளம் தாக்கியபோது அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் பெரும் சேதம் ஏற்பட்டது. ஆனால், இம்முறை பேய் மழை பெய்த போதும் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்கூட்டியே திட்டமிட்டு தக்க நடவடிக்கைகள் எடுத்ததால் சென்னையில் பெருமளவு பாதிப்புகள் குறைந்துள்ளன. இரண்டாவது முறையாக தென் மாவட்டங்களை மழை வெள்ளம் ...
முன்னாள் முதல்வரும், முன்னாள் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தொண்டர்கள் உரிமைமீட்பு ஆலோசனைக் கூட்டம் கோவை திருச்சி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், jct பிரபாகரன், கு.ப.கிருஷ்ணன், புகழேந்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழா துவங்குவதற்கு முன்பாக ஜமாப், ...













