திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் கசிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை 10 மணியளவில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா பள்ளி தலைமை ஆசிரியர் குழந்தைசாமி தலைமையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பதினொன்றாம் வகுப்பு படிக்கும் 304 மாணவ மாணவிகளுக்கு ...

ஜம்மு காஷ்மீரில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், உதம்பூர் மாவட்டத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதையொட்டி, அந்த மாவட்டத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக எஸ்எஸ்பி அமோத் அசோக் நாக்புரே தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு, சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் ...

சென்னை: மெரினா விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்களில், வெயில் தாங்க முடியாமல் 5 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் எனக்கூறியுள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நேற்று சென்னையில் இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சிக்கு தேவையான ஒத்துழைப்பையும், வசதிகளையும் ...

மெரீனாவில் விமானப் படை சாகச நிகழ்ச்சியின்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அரசை கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் ...

முன்னாள் முதல்வரும் கழக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் தலைமையை ஏற்று தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தங்களை அதிமுகவில் இணைத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கோவையை சேர்ந்த 50 க்கும் ...

உதகை : நீலகிரி மாவட்ட தமிழக வெற்றி கழகம் மாவட்ட சார்பில் அண்ணல் காந்தியடிகளாரின் 156 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு உதகை நகர துணைச் செயலாளர் முசீர் முன்னிலையில் உதகை அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகள் காப்பகம் இல்லத்தில் தமிழக வெற்றி கழக உதகை ...

கோவை: குலத்தொழிலை அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லும் திமுகவை ஏன் நீங்கள் எதிர்க்கவில்லை என்று விஸ்கர்மா சமூக மக்களிடையே பா.ஜ.க.தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் ஆவேசமாகப் பேசும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மத்திய அரசின் விஸ்வகர்ம திட்டத்தை தமிழக அரசு தமிழகத்தில் இதுவரை அமல்படுத்தவில்லை. விஸ்வகர்மா திட்டம் குலத்தொழிலை ...

கோயமுத்தூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் இன்று திடீரென்று அதிகாலை சூலூர் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்து ஆய்வு பணியை மேற்கொண்டார் அதிகாலையிலேயே புற நோயாளிகள் அதிக அளவில் இருந்தனர் . மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த உள்நோயாளிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு மருத்துவமனையின் சிகிச்சை ...

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் அரங்கத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் தலைவர் ஜி.கே. வாசன் தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது தமாகவில் உறுப்பினர் சேர்க்கை விரைவாக நடந்து கொண்டிருக்கிறது 2026 தேர்தலில் த மா கவின் குரல் ...

சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்து விலகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றம்சாட்டி, நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக ...