கோவை மே 16கோவை மாவட்ட காவல்துறையின் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது அதில் கூறியிருப்பதாவது:-சேலம்- கொச்சின் ரோட்டில் மரப்பாலத்தில் அமைந்துள்ள இரயில்வே கீழ்பாலத்தை திரும்பக்கட்டும் பணி நடைபெற உள்ளதால் இன்று ( 16 -ந் தேதி) முதல் கோவையிலிருந்து பாலக்காடு மற்றும் பாலக்காட்டிலிருந்து கோவைக்கு செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் அனைத்தும் மரப்பாலம் சாலை ...

கோவை மே 16 கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றி வந்த 10 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்கள் வருமாறு:- காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் சரவணம்பட்டி சட்டம் – ஒழுங்குக்கும் ,அங்கு பணியாற்றிய செந்தில்குமார் சிறப்பு நுண்ணறிவு பிரிவுக்கும் மாற்றப்பட்டனர். காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி ரத்தினபுரி குற்றப்புலனாய்வு ...

கோவை மே 16 கோவை மாவட்டம் பேரூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர் உமாசங்கர் (வயது 59) இவர் தனது மகளின்திருமணத்திற்காக கடந்த ஏப்ரல் 2 – ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு,பீரோவில் இருந்த 12 சவரன் தங்க நகைகள், 878 கிராம் ...

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நகராட்சி நகராட்சி சமுதாயக் கூடத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 171 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் க.கிரியப்பனவர் வழங்கினார் இம்முகாமில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் (பொ) விஸ்வநாதன், வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர், நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர ...

கோவை மே 14 கோடை வெயில் தாக்கத்தை தணிக்க கொளுத்தும் வெயிலில் பணியாற்றி வரும் கோவை மாநகர போக்குவரத்து காவலர்கள் 36 பேருக்கு ஏ.சி. ஹெல்மெட்டுகள் நேற்று வழங்கப்பட்டது இதை போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் வழங்கினார்.இந்த ஹெல்மெட்டுகளை ஏசியன் பேப்ரிக்ஸ் நிறுவனத்தார் தனது சி.எஸ்.ஆர். நிதியிலிருந்து வழங்கி உள்ளனர்.ஒருஹெல்மெட்டின்விலை ரூ.15 ஆயிரம் ஆகும்.இந்த ஹெல்மெட் ...

கோவைமே 15 தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. மேலும் மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் ...

கோவையில் அனைத்து மத நல்லிணக்க அமைப்பான *திவ்யோதயா சென்டரில்* அதன் டைரக்டர் *அருட்தந்தை வில்சன்* அவர்கள் தலைமையில் நடந்த விழாவில் கோவை அன்னூர் காடுவெட்டி பாளையத்தில் உள்ள பிரபஞ்ச அமைதி சேவா ஆசிரமத்தின் நிறுவனர் *சுவாமி சிவாத்மா* அவர்கள், இஸ்லாமிய அமைப்பின் தலைவர் அவர்களோடு அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின் நிறுவனத் தலைவர் ...

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுக்கா சொக்கனூர் கிராமத்தை சேர்ந்த மூன்று வயது ரிஸ்வந்த்- தந்தை பெயர் முத்துக்குமார் என்ற சிறுவனுக்கு பிறவியிலேயே இரு கால்களும் சிதைந்த நிலையில்  இருப்பது கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி எலும்பு முறிவு பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவனுக்கு வலது கால் முட்டிக்கு கீழ் அகற்றப்பட வேண்டிய நிலை ...

கோவை மே 14 கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் ஸ்ரீராம் ( வயது 16) கோவையில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வந்தார் . நேற்று தனது நண்பர்கள் 3 பேருடன் ஆனைமலை அருகே அம்பராம்பாளையம் ஆற்றுக்கு குளிக்க சென்றார் .அங்கு 3 பேரும் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். ...

கோவை மே 14 கோவை ரயில் நிலையம் ரோட்டில் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் உள்ளது.இதன் எதிர் புறம் உள்ள ரோட்டில் நேற்று ஒருவர் மயங்கி கிடந்தார்.உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். அவருக்கு 30 வயது இருக்கும்.அவர் யார்? ...