இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் வழித்தோன்றலான மன்னர் என்.குமரன் சேதுபதியின் மூன்றாம் ஆண்டு நினைவு கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது இதில் 18 அணிகள் 216 வீரர்கள் பங்கேற்றனர் இந்த விளையாட்டானது மூன்று நாட்களாக நடைபெற்று இறுதிப்போட்டியில் பெரியபட்டினம் அணியும் இராமநாதபுரம் சேதுபதி அணியும் விளையாடின இதில் பெரிய பட்டிண அணி இரண்டு கோள்கள் அடித்து வெற்றி பெற்றது ...

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் யூனியன், திருப்பாலைக்குடி ஊராட்சியில் சுமார் 9000 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வசிக்கின்றனர். விளையாட்டு மைதானம் இல்லாததால், இளைஞர்கள் பலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், அவர்களின் வாழ்க்கை முறை மாறுவதாகவும் திருப்பாலைக்குடி ஊராட்சி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு ...

ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியில் சத்திரிய இந்து நாடார் பள்ளிகள் அபிவிருத்தி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் புதிய தலைவர் பழனி குமார், செயலாளர் எம்.பெத்துராஜூ, பொருளாளர் ஏ. ஜெகதீஷ் குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சத்திரிய இந்து நாடார் உறவின்முறை பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் உறவின் முறைக்கு ...

ராமநாதபுரம் மாவட்டம், வெளிப்பட்டினம் அருகே உள்ள திலகவதி அம்மன் தெருப் பகுதியில், சர்வே எண் 94-ல் சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக 21 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புப் பகுதி மக்கள், 2017 ஆம் ஆண்டு வரை கோயில் நிர்வாகத்திற்கு வாடகை செலுத்தி வந்துள்ளனர். ஆனால், 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு கோயில் ...

உதகை மே 22 நீலகிரி மாவட்ட ரஜினி நற்பணி மன்றம், மற்றும் அனைத்து சங்கங்கள் இணைந்து பாஜக சார்பாக உதகையில் இந்தியா ராணுவத்திற்கு வீரவணக்க அணிவகுப்புபேரணி உதகை ஷேரிங் கிராஸ் பகுதியில் இருந்து கமர்சியல் சாலை வழியாக ஏடிசி திடல் வரை பேரணி துவங்கியது, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு தீவிரவாதிகள் முகாம்களை வேரோடு மண்ணோடு ...

உதகை மே 25 நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம் பூங்காவில் கோடை விழாவின் ஒரு பகுதியான 65வது பழக்காட்சியினை அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்  லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., முன்னிலையில்  (23.05.2025) துவக்கி வைத்து, பார்வையிட்டார், இந்நிகழ்ச்சியில் அரசு தலைமைக் கொறடா  தெரிவித்ததாவது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, இந்தியாவின் ...

கோவையில் பெய்து வரும் தொடர் மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்தது. கோவையில் கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்கிறது. இந்த மழையால் கோவை குற்றால ...

கோவை மே 26 கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் ஜெசிஸ் உதயராஜ் ஆகியோர் நேற்றுஅதிகாலையில் காந்திபுரம் 3-வதுவீதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் திடீர் சோதனை நடத்தினார்கள்.அப்போது சட்ட விரோதமாக கள்ள சந்தையில் மது விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் ,மங்கலம் ,கோட்டக்குடி பக்கம் ...

கோவை ஜூன் 26 கோவை சிங்காநல்லூர் கோத்தாரி நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 51) இவர் கடந்த 8 மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது மனைவி பிரீத்தி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு ...

கோவை மே 26 கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர், பெரியார் நகரை சேர்ந்தவர் மயில்சாமி (வயது54) இவரது அண்ணன் கருப்புசாமி(வயது 57) இவர்கள் அருகருகே வசித்து வருகிறார்கள்..இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. இது கோஷ்டி மோதலாக வெடித்தது.ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் மயில்சாமியும் ,அண்ணன் கருப்பசாமியும் படுகாயம் அடைந்தனர் .இது தொடர்பாக ...