கோவை ஆர் .எஸ் . புரம் காமராஜபுரம் சந்திப்பில் உள்ள ஒரு கடை முன் நேற்று 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தலையில் பலத்த காயத்துடன் படுகொலைசெய்யப்பட்டு கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் ஆர். எஸ். புரம் .காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை ...
கோவை மாவட்டம்பொள்ளாச்சி அருகே இந்த ஆண்டில் 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாறன்(வயது 58) என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்குகோவை மாவட்டம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவில் எதிரி மாறனுக்கு ஆயுள் ...
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் நடந்த நகை திருட்டு மற்றும் அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் காவலில் இருந்த இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த சம்பவம், பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ. தீவிரமாக விசாரித்து வருகிறது. பேராசிரியை நிகிதா, தனது தாயார் சிவகாமியுடன் ஜூன் 27-ஆம் தேதி ...
கோவை அருகே உள்ள குறிச்சி ,பழனி போயர் வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ் பாபு ( வயது 59) இவர் சுந்தராபுரம் காந்திநகர் பகுதியில் பழைய இரும்பு – பேப்பர் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் அவரது செல்போன் காமிரா மூலம் கடையை கவனித்தார். அப்போது கடையில் உள்ள சிசிடிவி கேமரா “ஸ்விட்ச் ஆப் ...
கோவையில் மத்திய மாநில அரசு அலுவலகங்களுக்கு “இ-மெயில் ” மூலம் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வருகிறது. இது குறித்து போலீசார் சோதனை நடத்தும் போது அது புரளி என்பது தெரிய வருகிறது .இந்த நிலையில் நேற்று கோவை அவிநாசி ரோடு உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு “இமெயில் ‘மூலம் வெடிகுண்டு மிரட்டல் ...
கோவை செல்வபுரம் எல்.ஐ.சி. காலனியில், பேரூர் சோதனை சாவடி அருகே ஆத்தங்கரை வாய்க்கால் பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு கடையின் முன்பு ஒருவர் போர்வையால் மூடியபடி தூங்கிக் கொண்டிருந்தார். நேற்று அதிகாலை அந்த வழியாகச் சென்ற ஒரு வாலிபர் திடீரென அந்த நபரின் தலையில் கல்லை போட்டு கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது ...
உடுமலை பக்கம் உள்ள கண்ணமநாயக்கனூரை சேர்ந்தவர் செய்யது . இவரது மகன் மொகைதீன் இப்ராஹிம் ( வயது 18) பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரிக்கு தினமும் பஸ்சில் சென்று வருகிறார். நேற்று இவர் கல்லூரி முடிந்து வீட்டுக்கு வருவதற்காக பொள்ளாச்சி – உடுமலை ரோட்டில் உள்ள கல்லூரி அருகே பஸ் ஸ்டாப்பில் ...
கோவை அருகே உள்ள சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் 55 வயது அரசு பள்ளி கூட ஆசிரியை. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர் கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். மகன்கள் இருவரும் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகிறார்கள். இதனால் ஆசிரியை மட்டும் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் உடுமலையை சேர்ந்த 30 ...
புதுடெல்லி: லாபம் பெறுவதற்காக பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் உண்டு. இதற்காக அவர்கள் பல்வேறு இடங்களிலிருந்தும் ஆலோசனை பெறுவது வழக்கம். இதைப் பயன்படுத்தி உ.பி.யின் வாராணசியிலிருந்து ஒரு கும்பல் இலவச ஆலோசனை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்காக, அந்த கும்பல் உ.பி.யின் வாராணசியில் இரண்டு கால்சென்டர்களையும் நடத்தி வந்துள்ளது. இவர்கள் காட்டிய ஆசை வலையில் வீழ்ந்தவர்கள் தங்களது வங்கி ...
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று காலை சுமார் 7.20 மணியளவில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து உடனடியாக கோவை மாநகர காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் கிடைக்கப்பெற்றதும் கோவை மாநகர போலீசார் உடனடியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விரைந்து வந்து வெடிகுண்டு ஏதேனும் வைக்கப்பட்டுள்ளதா ...













