கோவை அருகே உள்ள இருகூர், மாணிக்கம் நகர், சின்னியம்பாளையம் ரோட்டில் டாஸ்மாக் கடை எண் (18 14 ) உள்ளது. தேர்தலுக்காக 3 நாள் டாஸ்மாக் கடை மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் கடையை திறக்கச் சென்றபோது முன் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்து 209 மதுபாட்டில்களை காணவில்லை. ...

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பாலக்கரை அருகே நேற்று இரவு பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகர பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்பொழுது சாலையின் நடுவே போதையில் இளைஞர்கள் நின்று கொண்டு இருந்தனர். அவர்களுக்கும் பேருந்து ஓட்டுனருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக ஆத்திரமடைந்த இளைஞர்கள் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை பேருந்துக்குள் தாக்கியதுடன் ...

திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் நகர் நல சுகாதார மையம் அமைந்துள்ளது. இந்நகர் நல மையத்தில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தினந்தோறும் சுமார் 100 பேருக்கு மேல் காய்ச்சல் தலைவலி நீரிழிவு மற்றும் மகப்பேறு சிகிச்சை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நகர் நல மையத்தில் நேற்று மாலை அப்பகுதியில் வசிக்கும் குடிபோதை ஆசாமிகள் அடாவடித்தனமாக நகர் ...

திருவள்ளூர்: ஸ்ரீ பெருமந்தூர் காவல் நிலையத்தில் பயங்கர ரவுடி லிஸ்டில் உள்ள பிபிஜி சங்கர் கொலையில் இவனது பெயரை பொதுமக்களிடம் சொன்னால் திரும்பிப் பார்க்காமல் தலை தெரிக்க ஓடுவார்கள். இவன் கடந்த 13.4.2024 அ ன்று புட்லூர் பகுதியில் அவனது கூட்டாளிகளுடன் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களிடம் ...

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட செம்மஞ்சேரி அடுத்த கண்ணகி நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மாலை 4.30 மணி அளவில் எழில் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தலைமை காவலர் புஷ்பராஜ் மற்றும் காவலர் சிலம்பரசன் இருவரும் ரோந்து சுற்றி வரும் போது எழில் நகர் 16 வது பிளாக் அருகில் 1. ...

கோவை: கோவை பி.என்.புதுாரில் உள்ள ஓட்டுச்சாவடி அருகே, 200 மீட்டருக்கு அப்பால் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர், வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த போலீசார், ‘கூட்டம் கூடக் கூடாது, கட்சி சின்னத்தை வைத்திருக்க கூடாது’ என்று கூறியுள்ளனர். கட்சி சின்னத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அங்கு போடப்பட்டிருந்த பந்தலை அகற்ற ...

கோவை நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 52). இந்நிலையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கோவை மக்களவைத் தொகுதி, நல்லாம்பாளையம் மாநகராட்சி நடுநிலை பள்ளி பூத் எண் 145 ல் வாக்களிக்க சென்ற போது கையில் மை வைக்கும் ஊழியரிடம் வலது கை ஆள்காட்டி விரலை காண்பித்து உள்ளார். அப்போது அங்கு இருந்து அதிகாரிகள் ...

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ் (வயது 50) தொழில் அதிபர். இவருக்கு சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மற்றும் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிலையில் இவர் தனக்கு சொந்தமான ஒரு நிலத்தை விற்றது தொடர்பாக வருமானவரித்துறை ரூ.5 கோடி அபராதம் செலுத்த நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதனை சரி செய்வதாக கூறி ...

கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த 10-க்கு மேற்பட்ட வாலிபர்கள் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் அந்த வாலிபர்கள் குடியிருக்கும் வீட்டின் எதிரே வசிக்கும் இளம் பெண்ணை பார்த்து அந்த வாலிபர்களில் ஒருவர் ஆபாசமாக சைகை காட்டியுள்ளார். இதனை அறிந்த அந்தப் பெண்ணின் உறவினர்கள் அந்த வாலிபரிடம் போய் ...

கோவை செல்வபுரம் ,பேரூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி மல்லிகா ( வயது 70) நேற்று இவர் வீட்டில் தனியாக இருந்தார்.. அப்போது ஒரு ஆசாமி தேர்தல் பிரச்சார நோட்டீஸ் கொடுப்பது போல மூதாட்டியின் வீட்டுக்கு சென்றார். அவரிடம் குடிக்க தண்ணீர் கேட்டார். மூதாட்டி வீட்டுக்குள் சென்ற போது பின் தொடர்ந்து சென்று ...