கோவை மாவட்டம் காரமடை வனப்பகுதியில்சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக காரமடை போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் அரவிந்தராஜன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்.அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக மகாதேவபுரம் தினேஷ் ( வயது24 )சுக்கு காபி கடை கார்த்தி (வயது 28 )தேக்கம்பட்டி குருநாதன் ( வயது23) நெல்லித்துறை ரோடு ...

கோவை மாவட்ட காவல்துறையினர் சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் பொள்ளாச்சி கிழ‌க்கு காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் ...

காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் டில்லி ராணி .இவரது கணவர் பெயர் மேகவர்ணன் கம்ப்யூட்டருக்கு தேவையான உதிரி பாகங்களை விற்பனை செய்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். நகரில் சிறு காவேரி பக்கத்தில் வசித்து வந்தனர். கணவன் மேகவர்ணன் மனைவி டில்லி ராணியின் நடத்தையில் சந்தேகப்பட்டு ...

சென்னை: சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று இ-மெயில் மூலம் மிரட்டல் வந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே போலியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் வழக்கம் அதிகமாகி வருகிறது என்பதும் குறிப்பாக சென்னை விமான நிலையம், தனியார் பள்ளிகள் உள்பட பல இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருப்பதும் ஒவ்வொரு முறை ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் வசிப்பவர் ராமதாஸ். இவர் குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுள்ளார். அவர் கடந்த 4-ம் தேதி திரும்பி வந்து பார்த்தபோது அவரின் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது . வீட்டிலிருந்த 10 சவரன் தங்க நகைகளை காணவில்லை .யாரோ திருடி சென்று விட்டனர். இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட நபர் மேட்டுப்பாளையம் காவல் ...

கோவை ராமநாதபுரம் ,சுப்பையா லே-அவுட்டை சேர்ந்தவர் கணேசன், இவரது மகன் லோகேஷ் (வயது 24) இவர் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 1-4 -20 24 அன்று இவரது வாட்ஸ் அப்புக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் புதிதாக தொடங்கியுள்ள பங்கு சந்தை வியாபாரத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் ...

காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் மயான கொள்ளை திருவிழாவின் போது பிரேம்குமார் என்பவருக்கும் உதயகுமார் பாரிவேந்தன் தரப்புக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரேம்குமாரின் தந்தை ராஜாராம் பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் உதயநிதி பாரி வேந்தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது . இதன் காரணமாக இரு ...

கோவை : கேரள மாநிலம், கொச்சியை சேர்ந்தவர் அஸ்லாம் (வயது 28) தொழில் அதிபர். இவர் கொச்சியில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன் காரில் பெங்களூரு சென்று விட்டு கொச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் கோவை அருகே எல். அண்டு .டி பைபாஸ் ரோட்டில் வந்தபோது காரில் வந்த ...

கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. அரசு பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 4-ந் தேதி தனது தந்தை மாதவனுடன் அங்குள்ள பேக்கிரிக்கு சென்றார். அப்போது பாத்ரூம் செல்வதாக கூறிவிட்டு சென்றவர் எங்கோ மாயமாகிவிட்டார். இதுகுறித்து தாயார் வள்ளி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் காணவில்லை வழக்கு பதிவு செய்து ...

கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர், மகாலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 27 )தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சொக்கநாச்சி (வயது 24 )நேற்று முன்தினம் முருகானந்தம் வேலைக்கு சென்று விட்டார் .சொக்கநாச்சி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அதை நோட்டமிட்ட 3 பேர் கொண்ட கும்பல் திடீரென்று அவரது வீட்டுக்குள் புகுந்தது..கத்தியை காட்டி ...