கோவை கணபதி அருகில் உள்ள மணியக்காரன் பாளையத்தில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்டுள்ள 2 கண்காணிப்பு கேமராவின் கண்ணாடியில் மை பூசி யாரோ அழித்துள்ளனர். இன்று அதிகாலை 4 மணி அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது பற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது.போலீஸ் கமிஷனர் சரவண ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள அப்பார்ட்மெண்ட் முன் உள்ள குப்பை தொட்டி அருகே பிறந்து 3 நாட்களான பெண் குழந்தை பிணமாக கிடந்தது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சிக்கதாசம் பாளையம் கிராம நிர்வாக அதிகாரி மணிகண்டன் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குழந்தை பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் ...
கோவை பீளமேடு சர்வதேச விமான நிலைய ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக பீளமேடு போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் நேற்று இரவு அந்த லாட்ஜில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்குள்ள 3-ம் நம்பர் அறையில் விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆவராம்பாளையம், இளங்கோ நகரை ...
கோவை அருகே உள்ள காளப்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் துறை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு இடத்தில் மூட்டையில் அரிசி குவித்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. சோதனை செய்ததில் அது ரேசன் அரிசி என்று கண்டுபிடிக்கப்பட்டது. ...
கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு சென்னை ,பெங்களூர், மும்பை, டெல்லி, கொல்கத்தா, புனே உள்பட நாடு முழுவதும் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு வரும் விமானத்தில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கவரி துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன் தினம் ...
கோவை சூலூரில் உள்ள ஒரு கோவில் விவகாரத்தில் ஒன்றரை லட்சம் லஞ்சம் வாங்கிய போது இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திராவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர்.அவர் தன்னை ஜாமினில் விடுவிக்க கோரி கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி விஜயா ...
கோவை சரவணம்பட்டி, சிவானந்தபுரம் 4-வது வீதி சேர்ந்தவர் வெங்கடேஷ், இருசக்கர வாகன ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவரது தாயார் உடல் நலக்குறைவால் பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவியாக இவரது தந்தை இருந்து வருகிறார். வெங்கடேசன் மனைவி தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.கடந்த 8-ம் தேதி வெங்கடேஷ் ஒர்க் ...
கோவை மாவட்ட ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர்.கார்த்திகேயனை சந்தித்து நேற்று ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டத்தில் சில பகுதிகளில் போலியாக சோதனை சாவடிகள் அமைத்து கனிம பொருட்களை ஏற்றி வரும் டிப்பர் லாரிகளிடம் இருந்து வரி என்ற பெயரில் பண வசூல் ...
கோவை கவுண்டம்பாளையம், அசோக் நகரை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி பச்சையம்மாள் ( வயது 59) சமையல் வேலை செய்து வந்தார்.முன் விரோதம் காரணமாக இவரை பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜ்குமார் (வயது 23) என்பவர் தகாத வார்த்தைகளால் பேசி கத்தியால் குத்தினாராம். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இது ...
கோவை: கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் சிபில் ( வயது 42) இவர் கண் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் கண் மருத்துவமனைக்கு நேற்று வந்திருந்தார். சிகிச்சை முடிந்து ஊருக்கு செல்வதற்காக கோவை ரயில் நிலையம் வந்தார்.அங்குள்ள பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருக்கும் போது அவரது சட்டைப் பையில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு ...