சென்னை: சென்னை அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைதான மகா விஷ்ணு, திருப்பூரில் தான் நடத்தி வந்த பரம்பொருள் அறக்கட்டளையை மூடுவதாக அறிவித்துள்ளார். மேலும், அறக்கட்டளைக்கு இனி எவ்வித பணமும் அனுப்ப வேண்டாம், அந்த கட்டமைப்பு இனி இயங்காது எனவும் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆன்மீக ...

சென்னை: கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் சனிக்கிழமை (மே 24) பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய ...

பல்லாவரம் பம்மல் அருகே குவாரி உரிமையாளரிடம் மாதம் 3 லட்சம் ரூபாய் மாமூல் கேட்டு, பம்மல் 5-வது வார்டு திமுக வட்ட செயலாளர் மிரட்டுவதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “பல்லாவரம் பம்மல் அருகே, மாதம் 3 லட்சம் ரூபாய் ...

திருவனந்தபுரம்: கேரளத்தில் வெள்ளிக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்துள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக திருவனந்தபுரத்தில் 12 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. அருவிக்காரா அணையின் மூன்று மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, சனிக்கிழமையும் கேரள மாநிலம் காசர்கோடு, கன்னூர் மாவட்டங்களுக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் ...

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் இன்று தலைநகர் டெல்லியில் 10வது நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதன்முறையாக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார். கடந்த காலங்களில் மத்திய திட்டக்குழு என்று செயல்பட்டு வந்த நிதிக்குழு, பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்ததும், கடந்த 2015ம் ஆண்டு, திட்டக்குழு கலைக்கப்பட்டு, அதற்கு பதிலாக நிதி ஆயோக் என்ற ...

பழனியில் பைனான்சியர்களை குறி வைத்து பணம் பறித்த கும்பல் பெண்களை நெருக்கமாக பழகவிட்டு வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். பழனி நகரைச் சேர்ந்தவர்கள் ராணி சித்ரா, நாராயணன், துர்க்கை ராஜ், ராணி சித்ரா. இவர்கள் காவல்துறையில் சில காலம் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்கள். இந்த ...

ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில், பா.ஜ.க ஆளாத மாநில அரசுகளின் மீதும், பா.ஜ.க சாராத அரசியல் தலைவர்கள் மீதும் அமலாக்கத்துறை உள்ளிட்ட ஒன்றிய விசாரணை அமைப்புகளை ஏவிவிட்டு, அச்சுறுத்துவது வழக்கமான நடவடிக்கையாக அமைந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி, மக்களிடம் பெற்றிருக்கிற பெரும் மதிப்பை கெடுக்கும் வகையில், டாஸ்மாக் மீது புகார் அளிக்கப்பட்டு, அதன் ...

புதுடெல்லி: நாட்டை பாதுகாக்கும் பணியில் வீர தீர செயல்கள் புரிந்த பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று விருதுகளை வழங்கினார். பாதுகாப்பு படையினருக்கான வீர தீர விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 26 அதிகாரிகள் மற்றும் ...

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடா்பாக அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஐந்தாவது கட்ட மறைமுகப் பேச்சுவாா்த்தை இத்தாலி தலைநகா் ரோமில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இந்தப் பேச்சுவாா்த்தைக்கு மத்தியஸ்தம் செய்துவரும் ஓமன் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சா் பாதா் அல்-புசயீதி எஸ்க் ஊடகத்தில் இதனை உறுதிப்படுத்தியுள்ளாா். எனினும், இது தொடா்பாக அமெரிக்காவோ, ஈரானோ எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ‘பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்ட திருத்தத்திற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த திட்டமிட்டு கொண்டு வந்துள்ளனர். இந்திய அரசியலமைப்பின்படி வழங்கப்பட்ட தீர்ப்பா? அல்லது ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் வழங்கப்பட்ட தீர்ப்பா? என சிலர் பேசுகிறார்கள். ஆளுநர் தொடர்ந்து பிரச்சனை ...