சென்னை: திருச்சி அருகே நடந்த விபத்தில் உயிரிழந்த முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அரசு அலுவலர்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூபாய் ஒரு கோடி பெற்று வழங்கப்படும்; அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்து லட்சம் ரூபாய் மற்றும் குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் ...
ஈரான்- இஸ்ரேல் போர் காரணமாக, கச்சா எண்ணெய் விலைகள் உயரக்கூடும் என்ற அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தி உள்ளன.இந்த சூழலில், கச்சா எண்ணெய் விலை உயருமா என்ற கேள்விக்கு, ஹர்தீப் சிங் புரி கூறியதாவது: கச்சா எண்ணெய் விலை நிலையாக, சமாளிக்கக் கூடியதாக உள்ளது. உலகளாவிய எரிசக்தி விலை கட்டுப்பாட்டில் இருக்கிறது.இந்த கொந்தளிப்பை சமாளிக்க முடியும் என்று ...
புதுடெல்லி: சாதிவாரி கணக்கெடுப்பில் பதிவு செய்வது குறித்து உ.பி. முஸ்லிம்களுக்கு மாநில பாஜக சிறுபான்மையினர் பிரிவு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.நாடு முழுவதிலும் விரைவில் தொடங்கவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட உள்ளது. இச்சூழலில் உ.பி.யில் சாதிவாரி கணக்கெடுப்பின்போது முஸ்லிம்கள் தங்கள் சாதிக்கு பதிலாக ‘இஸ்லாம்’ என்று தங்கள் மதத்தை மட்டும் குறிப்பிட்டாலே போதுமானது ...
ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்ததை அடுத்து, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறினால் விழா ஏற்பாட்டாளருக்கு சிறை தண்டனை என கர்நாடகாவில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பை வென்றதையடுத்து, தலைநகர்பெங்களூருவில் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ...
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது.இந்த குடமுழுக்கினை தமிழில் நடத்திடக் கோரி பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தும், ஆர்ப்பட்டம், பொதுக்கூட்டம் நடத்தியும் அரசுக்கு வலியுறுத்தின. நாம் தமிழர் கட்சியின் சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு தமிழிலும் நடத்தப்படும் ...
சென்னை: தமிழகத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்கும் நெட்வொர்க் இயங்கி வந்துள்ளது என அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் நான்கு பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. இதன் மூலம் இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையில் ...
சென்னை: ‘கீழடி அகழாய்வு விவகாரத்தில், தமிழரின் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டும் வரை திமுகவின் போராட்டம் ஓயாது’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய மடலில் கூறியிருப்பதாவது: தமிழர்களின் பண்பாட்டுப் பெருமையை பறைசாற்றும் கீழடி அகழாய்வுகள் குறித்த அறிவியல் பூர்வமான ஆய்வறிக்கையை மத்திய பாஜக அரசு திட்டமிட்டு புறக்கணித்து திருப்பி அனுப்பியதற்கான எதிர்வினைதான் திமுக ...
மாஸ்கோ: புஷேரில் ஈரான் அணுமின் நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்..அங்கே நூற்றுக்கணக்கான ரஷ்யர்கள் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம். அவர்கள் அங்கிருந்து வெளியேற மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.புஷேரில் ஈரான் அணுமின் நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் செர்னோபில் போன்ற ...
எய்ட்ஸ் நோயை உருவாக்கும் ஹெச்ஐவி தீ நுண்மியிடமிருந்து 99.9 சதவீதம் பாதுகாப்பு வழங்கும் புரட்சிகர ஊசி மருந்துக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு அனுமதி அளித்துள்ளது.உயிா்க் கொல்லி மருந்தான எய்ட்ஸை முழுமையாக குணப்படுத்த முடியாது என்றாலும், அதன் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான சிகிச்சை தொடா்ந்து மேம்பட்டுவருகிறது. இருந்தாலும், அந்த நோயை உருவாக்கும் ஹெச்ஐவி தீநுண்மி ...
பெய்ஜிங்: இப்போது சர்வதேச அளவில் அமெரிக்க டாலரின் ஆதிக்கம் இருக்கிறது. வர்த்தகத்திற்கு டாலரின் பங்கு முக்கியமானதாக இருப்பதே இதற்குக் காரணம்.இதற்கிடையே டாலரின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் சீன நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டு வருவது போலத் தெரிகிறது. இந்த விவகாரத்தில் சீன மத்திய வங்கி ஆளுநரின் பேச்சு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.உலக வர்த்தகத்தில் டாலருக்கு ...