விழுப்புரத்தில் நேற்று நடந்த நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் சீமான் கோபமாக சென்று கீழே இருந்தவர்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய சின்னமான செஞ்சிக் கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அது சத்ரபதி சிவாஜி மன்னரின் கோட்டை என குறிப்பிடப்பட்டிருப்பதை நாம் தமிழர் கட்சி மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் ...

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது. முதற்கட்டமாக தமிழகத்தில் 12 கோயில்கள் மாதிரி கோயில்களாகத் தேர்வு செய்யப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டு, இயற்கை சார்ந்த பொருட்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் தமிழக கோயில்களில் தரிசனம் செய்து விட்டு செல்லும் போது ...

நீலகிரி மாவட்ட முதல் கத்தோலிக்க பேராலயமான தூய மோட்சராக்கினி அன்னை பேராலயத்தின் 187 வது ஆண்டு விழா 15 ஆம் தேதி சிறப்பிக்கபட்டது.அன்னை மரியா விண்ணகம் சென்ற நாள் , பங்கு திருவிழா மற்றும் நாட்டின் 79 வது சுதந்திர விழா என்று முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது .கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆண்டு ...

கோவை மாநகர மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நேற்று கோவை ரயில் நிலையத்தில் சுற்றி வந்தனர். அப்போது அங்கு கேரளாவுக்கு செல்லும் ரயில் வந்தது. அந்த ரயிலில் ஏறி போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது பொது பெட்டியில் இருக்கைக்கு அடியில் ஒரு மூட்டை அனாதையாக கிடந்தது .உடனே போலீசார் அந்த மூட்டையை கைப்பற்றி பிரித்துப் பார்த்தனர். ...

கோவை தெற்கு உக்கடம், ஜி.எம். நகரை சேர்ந்தவர் அசன் காதர் .இவரது மகன் சேக் முகமது ( வயது 26) முன் விரோதம் காரணமாக இவரை அதே பகுதியை சேர்ந்த 3 பேர் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதில் ஷேக் முகமது காயமடைந்தார்.இவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது ...

கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் டாஸ்மாக் கடை (எண்1701)அருகே உள்ள பெட்டிக்கடையில் மதுபாட்டில்கள் -புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்து கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக ராமநாதபுரம் போலீசுக்கு தகவல் வந்தது .இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன்,சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ்ஆகியோர் அங்குதிடீர் சோதனை நடத்தினர்.அப்போது மது பாட்டில்களையும்,புகையிலை பொருட்களையும் பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்வது ...

கோவை திருச்சி ரோட்டில் உள்ள சி. எஸ். ஐ.கிறிஸ்து நாதர் ஆலயத்தில்வருடாந்திர ஸ்தோஸ்திர பண்டிகை நேற்று நடந்தது..இதையடுத்து ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.ஆலய வளாகத்தில் 40க்கும் மேற்பட்ட ஸ்டால்கள், உணவு அங்காடி அமைக்கப்பட்டிருந்தன..இதில் பல்வேறு விதமான பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.அருண் ஆனந்தராஜ் குடும்பத்தினர் விற்பனையை தொடங்கி வைத்தனர்.ஆலயத்துக்கு வந்தவர்கள்.தாங்கள் கொண்டு வந்த ...

கோவை : சென்னையைச் சேர்ந்தவர் லாவண்யா (வயது 40) மலர் ( வயது 40) இவர்கள் 2 பேரும் தங்களது குழந்தைகளை கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காக்க நாட்டில் நடைபெறும் அபாகஸ் (எண் கணிதம் )போட்டியில் கலந்து கொள்ள வைக்க திட்டமிட்டனர். அதன்படி லாவண்யா அவரது கணவர் சாய்ராம் (வயது 48) அவர்களது 8 ...

கோவை துடியலூர் , பன்னிமடை மேஸ்கோ கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 31) இவர் காந்திபுரம் ராஜாஜி வீதியில் ஆட்டோ மொபைல்ஸ் கடை நடத்தி வருகிறார் .இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அன்னூரில் உள்ள சூரிய தேவ் சிட்பண்ட்ஸ் என்ற நிதி நிறுவனத்தில் சீட்டு போட்டுள்ளார். இதற்கிடையே சீட்டின் தவணை முடிந்ததும் ரூ ...

பலத்த மழை காரணமாக கோவை குற்றால அருவியில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது .இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.இதையடுத்து அங்கு திரண்டு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்..இதுகுறித்து போளுவாம்பட்டி வனத்துறை வனச்சரகர் ஜெயச்சந்திரன் கூறியதாவது:-பலத்த மழையின் காரணமாக அருவியில் நேற்று காலையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது..இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா ...