கோவை, வ .உ .சி. பூங்கா மைதானத்தில் நேற்று ஒரு வாலிபர் பிணமாக கிடந்தார். அந்த வழியாக நடைப்பயிற்சி சென்றவர்கள் இதை பார்த்து கோவை ரேஸ் கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று இறந்து கிடந்தவர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவரது பெயர் கற்பக ...
கோவை மாவட்டம்,காரமடை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன்(வயது63). இவர் காரமடை தண்ணீர் பந்தல் பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இன்று காரில் அவரது கடைக்கு சென்று விட்டு மீண்டும் கோவை செல்வதற்காக தனது காரில் வீட்டில் இருந்து புறப்பட்டு உள்ளார். அப்போது, காரமடை மேம்பாலத்தின் அருகே திடீரென காரின் இன்ஜினில் இருந்து கரும்புகை வந்தது. ...
ராமநாதபுரம், மருதூர் சுப்பிரமணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 46). ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் குடும்பத்துடன் செந்தில் குமார் தூங்கிக் கொண்டு இருந்தார். அதிகாலை 4 மணிக்கு கதவை சிலர் தட்டும் சத்தம் கேட்டது. இதனால் தூக்கத்திலிருந்து விழித்த செந்தில்குமார் அதிர்ச்சி அடைந்தார். அப்போது அவரை ...
கோவையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் ஏராளமான சிகிச்சை பிரிவுகள் உள்ளது. இதில் 600க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்குள்ள பெண்கள் நரம்பியல் சிகிச்சை பிரிவில் நேற்று அதிகாலை ஒரு வாலிபர் திடீரென புகுந்தார். அப்போது அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வைத்திருந்த ஊசி மற்றும் மருந்துகளை அவர் ...
கோவை, பீளடு அருகே உள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் தனியார் “மெட்டல் “கம்பெனி உள்ளது. இங்கு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் ஷாம் சஹானி (வயது 30) என்பவர் வேலை பார்த்து வந்தார். அவருடன் சந்தோஷ் என்பவரும் வேலை பார்த்து வந்தார்.. சம்பவத்தன்று இருவரும் தொழிற்சாலையில் உள்ள அலுமினியம் பாய்லர் பகுதியில் நின்று வேலை செய்து ...
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள் உட்பட பல்வேறு கல்லூரிகள் உள்ளன .இந்த கல்லூரிகளில் தமிழ்நாடு , கேரளா, மற்றும் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்களில் பலர் கல்லூரி விடுதிகளில் தங்காமல் வெளியே தனியாக அறை எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று ...
சாமி கும்பிட சென்ற 4 பேர்… ஓட ஓட விரட்டிய யானை… ஒருவர் பலியான சோகம் – பீதியில் உறைந்துள்ள மக்கள்..!!
கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் ஆட்டுக்கல் பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் மருதாச்சலம். இவர் அதே பகுதியை சேர்ந்த முருகன், சதீஷ், ராஜா ஆகியோருடன் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பெருமாள்முடி கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றனர். அங்கு சாமி கும்பிட்டு விட்டு ஊருக்கு வரும் வழியில் விற்பனை செய்வதற்காக சீமாறு புல் சேகரித்தனர். அந்த சமயம் திடீரென ...
பெய்ஜிங்: டொனால்ட் டிரம்பின் அடாவடி வரி விதிப்பால் கோபமான சீனா, அமெரிக்காவுக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளது. ‘பிரிக்ஸ்’ நாடான பிரேசிலுடன் கைகோர்த்த சீனா ஒரே மூவ் மூலம் அமெரிக்காவுக்கு செல்ல வேண்டிய ரூ.4 லட்சம் கோடிக்கு ‘செக்’ வைத்துள்ளது. இதனால் டிரம்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அவர் விழி பிதுங்கி உள்ளார். சீனாவும், பிரேசிலும் சேர்ந்து ...
டிக் டாக் செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘டிக் டாக்’ செயலியில் பயனர்களின் தனியுரிமை பாதுகாப்புக்கு சந்தேகம் எழுந்ததால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் டிக்டாக்கை தடை செய்துள்ளன. அதேப்போல கடந்த ஜனவரியில் அமெரிக்காவும் இந்த செயலுக்கு தடை விதித்துள்ளது. இன்ஸ்டாகிராம் வருவதற்கு முன்பே, உலக அளவில் ‘டிக் டாக்’ செயலி ரீல்ஸ் வீடியோக்களுக்கு பிரபலமாக ...
சென்னை: சைவம், வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து இழிவாக பேசிய, முன்னாள் அமைச்சர் பொன்முடியின் முழு பேச்சு அடங்கிய வீடியோவை தாக்கல் செய்ய, காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த விசாரணையையும் வருகிற 28ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் திருவாரூர் கே.தங்கராசு நூற்றாண்டு ...