புது தில்லி: ஆப்கானிஸ்தானிலிருந்து பயணிகள் விமானத்தின் சக்கரப் பகுதியில் யாருக்கும் தெரியாமல் அமா்ந்து தில்லிவரை வந்த 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டாா். ஆா்வ மிகுதியால் அந்தச் சிறுவன் இந்த ஆபத்தான செயலை செய்தது விசாரணையில் தெரிய வந்ததையடுத்து அதே விமானத்தில் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காபூலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை ...
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுக, பாஜக கூட்டணி வைத்துள்ளன. ஏற்கெனவே இந்த கூட்டணி தள்ளாட்டத்தில் சென்று கொண்டிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் எதிரிகளான ஓபிஎஸ்ஸும், அமமுகவின் டிடிவி தினகரனும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிரடியாக வெளியேறினார்கள். எடப்பாடிக்காக பாஜக தலைவர்கள் தன்னை மதிக்கவில்லை என ஓபிஎஸ் குற்றம்சாட்டினார். அதே வேளையில் முதல்வர் வேட்பாளராக ...
நெல்லை: சர்ச்சைக்கு பெயர்போன நெல்லை மாவட்டத்தில், தற்போது இஸ்லாமிய மாணவிகள் தங்கி படிக்கும் மாணவிகள் விடுதியில் பாலியல் சம்பவம் அரங்கேறி உள்ளது தெரிய வந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை அருகே பாளையில் உள்ள இஸ்லாமிய மாணவிகள் தங்கும் விடுதியில், 9ம் வகுப்பு படித்து வரும் மாணவியில் பாலியல் சேட்டை செய்து வந்த, இஸ்லாமிய மதத்தைச் ...
சென்னையில் தொடங்கிய திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் கடந்த 20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் திருப்பதி பிரமோற்சவத்தை முன்னிட்டு திருக்குடை உபய உற்சவம், இவ்வாண்டு 21-வது ஆண்டாக இன்று சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. பாரிமுனை தேவராஜ முதலி தெருவில் உள்ள சென்னகேசவ ...
புதுடெல்லி: தமிழ்நாடு பல்கலைகளுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்தை, ஆளுநரிடம் இருந்து மாநில அரசுக்கு மாற்றம் செய்த மசோதா உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அமலுக்கு வந்தது. இதில் துணை வேந்தர்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப் பிரிவுகளுக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது.இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு ...
அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக மனம் திறந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளை எடப்பாடி பறித்தார்.அதன்பின் நாள்தோறும், கோபி குள்ளம்பாளையத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா அணியினர் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நீலகிரி மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்காக சேலத்தில் இருந்து சித்தோடு, கோபி, சத்தி ...
கோவை கடைவீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமுனா நேற்று உக்கடம் – பேரூர்பைபாஸ் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது பெரியகுளம் பகுதியில் உள்ள பூங்கா அருகேநின்று கொண்டிருந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தார். அவரிடம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் பேரூர் ...
கோவை வெரைட்டிஹால் ரோடு போலீசார் தாமஸ் வீதி – கே.ஜி. வீதி சந்திப்பில் உள்ள டாஸ்மாக் கடை (எண் 17 11),பகுதியில் நேற்று நள்ளிரவில் திடீர் சோதனை நடத்தினார்கள்.அப்போது அங்கு மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக தஞ்சாவூர் அக்ரகாரம் ,பெரியார் வீதியைச் ...
கோவை சுந்தராபுரம்,சிட்கோ சர்வீஸ் ரோட்டில் உள்ள கால்வாயில் நேற்று முன்தினம் சாக்கு முட்டையில் ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சுந்தராபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கபட்டது. அழுகிய நிலையில் கிடந்த உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர் .பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து ...
கோவை கணபதி ,காந்திமா நகர் பகுதியில் மாநகராட்சி சொந்தமான பூங்கா உள்ளது.இங்கு ஏராளமான மரங்கள் உள்ளன.சந்தன மரங்களும் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவில் யாரோ மர்ம நபர்கள் பூங்காவில் புகுந்து அங்கிருந்தத 5 சந்தன மரங்களை வெட்டி கடத்திச் சென்று விட்டனர்.இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றுவிசாரணை நடத்தினார்கள் ...













