ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில், முப்படைகளின் திறனை மேம்படுத்த ரூ.79 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு முன்பு, ஆகஸ்டு 5-ந் தேதி ரூ.67 ஆயிரம் கோடி மதிப்புள்ள ராணுவ தளவாடங்களை வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு பிறகு ...

புதுடெல்லி: டெலாய்ட் இந்​தியா நிறு​வனம் வெளியிட்ட அறிக்கையில் கூறி​யிருப்பதாவது: நடப்பு 2025-26-ம் நிதி​யாண்​டின் ஏப்​ரல்​-ஜூன் காலாண்​டில் இந்​தி​யப் பொருளா​தா​ரம் 7.8 சதவீதம் வளர்ந்​தது. இந்த நிலை​யில், நடப்​பாண்​டுக்​கான ஒட்​டுமொத்த வளர்ச்சி 6.7 முதல் 6.9 சதவீத​மாக இருக்​கும் என்று கணிக்​கப்​பட்​டுள்​ளது. டெலாய்ட்​டின் முந்​தைய கணிப்பை விட இது 0.3 சதவீதம் அதி​கம். தேவை மற்​றும் கொள்கை சீர்​திருத்​தங்​கள் ...

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் தங்கள் வீடுகளில் இந்த மாத மின்சார கட்டணம் அதிகரித்து இருப்பதாக குற்றம்சாட்டி வருகிறார்கள். அதேபோல் தமிழ்நாடு முழுவதுமே பலர் தங்களுக்கு இந்த மாதமும் கடந்த மாதமும் மின் கட்டண விகிதம் கடுமையாக அதிகரித்திருப்பதாக கூறிவருகிறார்கள். எனினும் தமிழ்நாட்டில் வீடுகளுக்கான மின்சார கட்டணம் திடீரென உயர்ந்தது ...

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமது சொந்த ஊருக்கு சென்று திரும்பும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரின் நலனை கருத்தில் கொண்டு 21-ந் தேதி (செவ்வாய்) அன்று ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள ...

கோவை : அவிநாசி ரோடு ஜி.டி. நாயுடு மேம்பாலம், உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை 10.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு கட்டப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலம் திறக்கப்பட்ட சில நாட்களில் அதிவேகமாக சென்ற ஒரு கார் கோல்டு வின்ஸ் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருலாரி மீது மோதியதில் பெண் உள்பட 3 ...

கோவை : தொழில் நகரமான கோவையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள். அது போன்று ஒடிசா பீகார், அசாம் ,மேற்கு வங்காளம் உட்பட வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி இருக்கிறார்கள். அவர்கள் திருவிழா மற்றும் பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம் ...

கோவை அம்மன் குளம் ,நியூ ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மகன் ஜெகநாதன் (வயது 23) இவர் பணம் – கொடுக்கல் வாங்க தொடர்பாக அதே பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் யாசினி, அப்ரின், ஆகியோர் மீது இராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த 2 திருநங்கைகளும் சேர்ந்து ஜெகநாதனை அடித்து உதைத்தார்களாம். ...

மதுரை முனி சாலை பகுதியை சேர்ந்தவர் முகமது பிர் தவ்ஸ் ராஜா (வயது 29 )இவர் கோவை அரசு மருத்துவமனையில் தற்காலிக தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். மேலும் இவர் பழைய காகிதங்களை சேர்த்து அதை விற்று மது குடித்து வந்தார். பிர் தவ்ஸ் ராஜாவுக்கும், 16 வயது சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது சிறுவனும் அவரும் ...

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் வேறு ஒரு சாதியை சேர்ந்த ஒருவரை காதலித்தார் .இந்த காதலுக்கு பெண்ணின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி சென்னையில் வீடு எடுத்து வசித்து வந்தனர். இதை அறிந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்தப் பெண்ணை காதலனிடமிருந்து பிரித்து வந்து வேறு ஒருவருக்கு திருமணம் ...

வாஷிங்டன்: ”ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை விரைவில் நிறுத்துவதாக பிரதமர் மோடி தன்னிடம் உறுதி அளித்துள்ளார்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று கூறினார். ரஷ்யாவும், இந்தியாவும் நெருங்கிய நட்பு நாடாக இருக்கும் நிலையில் டிரம்பின் இந்த கருத்து சர்வதேச அரசியலில் பேசும் பொருளானது. இந்நிலையில் தான் மத்திய வெளியுறவுத்துறை சார்பில் விளக்கம் ...