தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வின் முடிவுகள் மே 9-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதைவிட ஒரு நாள் முன்னதாகவே மே 8-ம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து, பத்தாம் வகுப்பு தேர்வுத் முடிவும் அசையா அட்டவணையைவிட முன்னதாக வெளிவரும் என கல்வித்துறை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகிய நிலையில், தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ...
டெல்லி: மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக மத்திய பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் அஜய் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பாக யுபிஎஸ்சி தலைவராக இருந்த பிரீத்தி சுதன் பதவிக்காலம் ஏப்ரல் 29ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், அந்த இடத்திற்கு அஜய் குமார் கொண்டு வரப்பட்டுள்ளார். இந்தியாவில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுகளை ...
சேலம் அரசு மருத்துவமனையில் 5 வயது சிறுவனின் முகத்தில் துளையிட்டு மண்டைக்குள் நுழைந்த கத்தியை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா். திறம்பட செயல்பட்ட மருத்துவக் குழுவினருக்கு கல்லூரி முதல்வா் தேவி மீனாள் பாராட்டு தெரிவித்தாா். இதுகுறித்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வா் தேவி மீனாள் ...
புதுடெல்லியில் ” அதிகாரப்பூர்வ அந்தஸ்துக்கு பொருந்தாத செயல்களில் ஈடுபட்டதாக” கூறி பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவரை இந்தியா மே 13 வெளியேற்றியது. மேலும், 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி அவருக்கு உத்தரவிட்டது. புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் பொறுப்பாளருக்கும் இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த அதிகாரியின் நடவடிக்கைகள் குறித்து கண்டனம் தெரிவித்தது. ...
அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா இடையே 142 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்திட்டு உலகத்தையே ஆச்சர்யப்பட வைத்துள்ளனர். இந்த டீல் மூலம் அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து சவுதி அரேபியா அதி நவீன உபகரணங்கள் மற்றும் சர்வீஸ் ஆகியவற்றை கொள்முதல் செய்யும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சவுதி அரேபியா ...
பார்வையாளர்கள் அனுமதி நேரம், மாலை 6 மணிக்கு பதில், இனி இரவு 7 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்த மாத இறுதிவாரத்தில் கோடைவிழா, மலர்கண்காட்சி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுவரும்நிலையில் பிரையண்ட்பூங்காவில் மலர்கள் பூத்துக்குலுங்க துவங்கி விட்டது. இதனை சுற்றுலாபயணிகள் கண்டு ரசித்தும், புகைப்படம் எடுத்தும் ...
கோவை: இந்தியா – இங்கிலாந்து இடையே மேற்கொள்ளப்பட்ட வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தால் ஆண்டுதோறும் அந்நாட்டுக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி 10 சதவீதமாக அதிகரிக்கும் என தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில் தமிழகம் 40 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இங்கிலாந்தில் ஆண்டுதோறும் ஆயத்த ஆடை இறக்குமதியில் இந்தியாவின் பங்களிப்பு 5 சதவீதம் மட்டுமே. மத்திய ...
முதலமைச்சர் ஸ்டாலின் ஐந்து நாள் பயணமாக நீலகிரி மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார். ஊட்டியில் உள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கும் முதலமைச்சர் , அரசு மற்றும் தனிப்பட்ட நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். முதுமலை, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் யானைகளுக்கு நேற்று மாலை கரும்பு வழங்கிய முதலமைச்சர், பழங்குடி பாகன்களுக்கான குடியிருப்புகளையும் திறந்து வைத்துள்ளார்.இந்த நிலையில், ...
ஒட்டாவா: கனடா நாடாளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சி மீண்டும் வெற்றி பெற்றது. புதிய பிரதமராக மார்க் கார்னி வெற்றி பெற்றார். அவரது அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்று கொண்ட தமிழ் வம்சாவளி பெண்ணான அனிதா ஆனந்த் பகவத் கீதையை வைத்து பதவி பிரமாணம் எடுத்து கொண்டார். ...
6,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய மைக்ரோசாஃப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் அந்நிறுவனத்தில் எந்த நிலையில் பணியாற்றும் ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிந்து கொள்ளலாம். உலகின் நம்பர்-1 மென்பொருள் நிறுவனம், உலகின் மதிப்புமிக்க பிராண்ட் என பல்வேறு பெருமைகளுக்கு உரித்தான மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கி, உலகின் பல்வேறு நாடுகளிலும் ...