தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இமாச்சலப் பிரதேசத்தில், மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால் பார்வதி நதி நிரம்பி வழிவதால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன.அதேபோல், குல்லுவில் மேகவெடிப்பு காரணமாக ‘ஜீவா’ சிற்றாற்றில் திடீர் வெள்ளம்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மறுபுறம், இந்துஸ்தான்-திபெத் தேசிய நெடுஞ்சாலையில் (NH 5) ஜக்ரியில் ...
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே நாய்கள் மனிதர்களை கடிக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என பலரும் இந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில், நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நாய் கடிப்பது மட்டுமின்றி அந்த நாயால் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு அபாயமும் ஏற்படுகிறது. தமிழ்நாட்டைப் ...
வெற்றிகரமாக விண்வெளி பயணம் மேற்கொண்டுள்ள சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் இன்று மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா ‘ஆக்ஸியம் – 4’ திட்டத்தின் கீழ் இன்று சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்கிறார். அவருடன் இதில் முன்னாள் நாசா வீரர் பெக்கி விட்சன், ஹங்கேரி வீரர் ...
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), ஹாரங்கி, ஹேமாவதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதனால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.இதனிடையே நேற்று கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 36 ஆயிரம் கன அடியும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியும் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த உபரிநீர் திருமகூடலு சங்கமத்தில் ...
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று அமெரிக்க பிரதிநிதி பட்டி கார்ட்டர் பரிந்துரை செய்தார்.ஈரான்-இஸ்ரேல் போரை அவர் புத்திசாலித்தனமாக நிறுத்தியதால் இந்தப் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் கார்ட்டர் தனது பரிந்துரைக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதேபோன்ற ஒரு பரிந்துரையை உக்ரைன் நாடாளுமன்ற வெளியுறவுக் குழு உறுப்பினர் மெரெஷ்கோ என்பவரும் ...
அமெரிக்காவின் நியூயாா்க் நகர மேயா் பதவிக்கான தோ்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியான ஸோக்ரன் மம்தாணி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இதற்கான உள்கட்சி தோ்தலில் முன்னாள் ஆளுநா் ஆண்ட்ரூ கியூமோவை வீழ்த்தி மம்தாணி வேட்பாளராக வெற்றிப் பெற்றாா். நியூயாா்க் நகர மேயா் தோ்தல் நவம்பா் 4, 2025 அன்று நடைபெறுகிறது.உகாண்டாவில் கடந்த ...
ஈரான் – இஸ்ரேல் இடையே போர் தொடங்கி நடந்து வரும் நிலையில், ஈரான் தொடர்ந்து தனது பாலிஸ்டிக் உள்ளிட்ட சக்திவாய்ந்த ஏவுகணைகளை இஸ்ரேல் மீது வீசி தாக்கி வருகிறது.இந்நிலையில் ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கவோ பயன்படுத்தவோ கூடாது என கூறி வந்த அமெரிக்கா, தனது வான் படையை ஏவி ஈரானின் போர்டோவில் உள்ள நிலத்தடி அணுசக்தி ...
ஈரான் மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல் ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் தங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று இஸ்ரேல் கருதியது.இதனால் ஈரான் மீது இஸ்ரேல் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஏராளமான சேதம் ஏற்பட்டது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேலுக்குள் புகுந்து தக்க பதிலடி கொடுத்தது.இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மேலும் ...
சென்னை:தீவிரவாதிகளின் ஊடுருவலை முறியடிக்கும் வகையில், தமிழக கடலோர மாவட்டங்களில் சாகர் கவாச் என்ற பெயரில் தொட்கிய 36 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை, இன்று மாலையில் நிறைவடைகிறது.தமிழகத்தில் உள்ள 14 கடலோர மாவட்டங்களில் காவல்துறையின் சார்பில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நேற்று காலை 6 மணிக்கு தொடங்கியது. இதில், தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம், ...
பீஜிங்: ‘அரசு ஆதரவுடன் நிகழும் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்ப்பதற்கான எங்களின் உரிமையே நாங்கள் நடத்திய ஆபரேஷன் சிந்தூர்’ என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2 நாள் மாநாடு சீனாவின் கிழக்கு ஷான்டாங் மாகாணம் குவிங்டாவ் நகரில் நேற்று (ஜூன் 25) தொடங்கியது. இந்நிலையில்,ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் ...













