நன்னையம் செய் அறக்கட்டளையின் சார்பில் கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள மெல்மருந்தங்கரை மற்றும் கீழ்மருந்தங்கரை பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு போர்வைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த மனிதநேய சேவை நிகழ்ச்சியை நன்னையம் செய் அறக்கட்டளை தலைவர் அருண் கார்த்திக், செயலாளர் கணேஷ் மற்றும் பொருளாளர் ...
கோவை மாவட்டம், தடாகம் பகுதியில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளுக்கு ரூபாய் 900 கோடி அபராதம் விதிக்க டெல்லியில் உள்ள எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனம் (டெரி) ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. கோவை மாவட்டம் சின்ன தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், சோமயம்பாளையம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளால் மலையடிவாரம் ...
ஆழியார் வனப்பகுதியில் பாறை மீது ஒய்யாரமாக நிற்கும் யானையை பார்த்து துள்ளி குதித்த மாணவர்கள். பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை பகுதியில் அமைந்துள்ளது சின்னார்பதி அரசு துவக்கப்பள்ளி.இந்தப் பள்ளி ஆழியார் அணை அருகே உள்ளது. வனப்பகுதியை ஒட்டி இந்த பள்ளி அமைந்துள்ளதால், அடிக்கடி வனவிலங்குகள் அச்சுறுத்தல் உள்ளது.இன்று பள்ளியில் வனப்பகுதியை ஒட்டி உள்ள உயரமான ...
கோவை, நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள பூச்சியூர், பண்ணாரி அம்மன் கோவில் பகுதியில் குட்டிகளுடன் பத்துக்கு மேற்பட்ட யானை கூட்டம் உலா வருகிறது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் சுற்றி உள்ள கிராமப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக யானைகள் விவசாய விளைநிலங்கள் மற்றும் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை அடுத்து அதனை தடுக்கும் ...
அதிகாலையில் வீட்டை சேதப்படுத்திய காட்டு யானையை விரட்ட,வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் வராததால், தொழிலாளர்கள் விடிய விடிய தூங்காமல் தவித்தனர். கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள ஸ்டான்மோர் எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் நுழைந்த அப்பன் டவுன் என்ற ஒற்றை காட்டு யானை, அங்குள்ள பார்வதி என்பவரின் குடியிருப்பின் ஜன்னல் மற்றும் கதவுகளை உடைத்தது. சத்தம் ...
தனியார் தோட்டத்தில் புகுந்த காட்டு யானை கூட்டத்தில், இரண்டு ஆண் யானைகள் சண்டையிடும் காட்சிகள், கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. அதேபோல் யானைகள் வலசை போகும் மிக முக்கியமான வழித்தடமாக, கோவை வனப்பகுதி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள ...
ஆழியார்-வால்பாறை சாலையில் ஒய்யாரமாக நடை நடந்து வந்த சில்லி கொம்பன் ஒற்றை காட்டு யானை.தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர்..! பொள்ளாச்சி அடுத்த ஆழியார் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை காட்டெருமை கரடி சிறுத்தை போன்ற வன விலங்குகள் ஆழியார் அணை பகுதிக்கு வந்து தண்ணீர் குடித்து செல்வது வழக்கமாக உள்ள நிலையில், இன்று ...
வனக் கல்லூரிக்குள் நுழைந்த பாகுபலி யானை.ஜீப் மூலம் வனத் துறையினர் விரட்ட முயன்ற போது வாகனம் உரசியதால் கோபம் அடைந்த யானை. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு வனக் கல்லூரியினுள் நேற்றிரவு பாகுபலி என்று அழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானை புகுந்தது.தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் ஜீப் மூலம் அதன் ...
வெள்ளப்பெருக்கு காரணமாக 16 நாட்கள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி, நவம்பர் 7ஆம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்த விடப்படுவதாக, வனத்துறை அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம், கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பொழிந்ததால், கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, கடந்த ...












