கோவை தடாகம் பகுதியில் இருக்கும் 185 சூளைகளுக்கு ரூ.925 கோடி அபராதம் கோவை தடாகம் பள்ளத்தாக்கில் சட்டவிரோதமாக இயங்கிய 185 செங்கல் சூளைகள் , சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி 2021ம் ஆண்டு மூடப்பட்டது.செங்கல் சூளைகளால் ஏற்பட்ட சூழல் பாதிப்புக்கு இழப்பீடு விதிக்க சுரங்கம் மற்றும் புவியியல் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டது.மாசு கட்டுப்பாடு ...
தமிழ்நாட்டில் முதல்முறையாக கோவையில் அமைக்கப்பட்டுள்ள வன விலங்குகளுக்கான சிறப்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட வனத்துறை புதிய திட்டங்களை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். கோவை மாவட்டம் வடகோவையில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியகம் வளாகத்தில், தமிழ்நாடு அரசு வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட பல்வேறு புதிய திட்டங்களின் திறப்பு ...
கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியில் ரயில் தடத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு யானை கூட உயிரிழக்கவில்லை. முன்பு பல யானைகள் ரயில் மோதலில் இறந்த அதே தடத்தில் இந்த மாற்றம் ஏற்பட்டு உள்ளது.இதற்கு காரணம், 2022-ல் அமைக்கப்பட்ட AI அடிப்படையிலான யானை முன்னெச்சரிக்கை அமைப்பு (Madukkarai AI Elephant Centre). இதுவரை சுமார் 6,000 ...
சேலம் ஏற்காட்டில் பனிமூட்டம் மற்றும் கடுங்குளிர்..ஏதிரே வருபவர்கள் கூட தெரியாத நிலையில் காணப்படும் சாலைகள்..வெண்மேகங்கள் தரையிறங்கும் காட்சி சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது… ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில், கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பனிப்பொழிவு மற்றும் கடும் குளிர் நிலவி வந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் கடும் ...
நன்னையம் செய் அறக்கட்டளையின் சார்பில் கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள மெல்மருந்தங்கரை மற்றும் கீழ்மருந்தங்கரை பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு போர்வைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த மனிதநேய சேவை நிகழ்ச்சியை நன்னையம் செய் அறக்கட்டளை தலைவர் அருண் கார்த்திக், செயலாளர் கணேஷ் மற்றும் பொருளாளர் ...
கோவை மாவட்டம், தடாகம் பகுதியில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளுக்கு ரூபாய் 900 கோடி அபராதம் விதிக்க டெல்லியில் உள்ள எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனம் (டெரி) ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. கோவை மாவட்டம் சின்ன தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், சோமயம்பாளையம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளால் மலையடிவாரம் ...
ஆழியார் வனப்பகுதியில் பாறை மீது ஒய்யாரமாக நிற்கும் யானையை பார்த்து துள்ளி குதித்த மாணவர்கள். பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை பகுதியில் அமைந்துள்ளது சின்னார்பதி அரசு துவக்கப்பள்ளி.இந்தப் பள்ளி ஆழியார் அணை அருகே உள்ளது. வனப்பகுதியை ஒட்டி இந்த பள்ளி அமைந்துள்ளதால், அடிக்கடி வனவிலங்குகள் அச்சுறுத்தல் உள்ளது.இன்று பள்ளியில் வனப்பகுதியை ஒட்டி உள்ள உயரமான ...
கோவை, நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள பூச்சியூர், பண்ணாரி அம்மன் கோவில் பகுதியில் குட்டிகளுடன் பத்துக்கு மேற்பட்ட யானை கூட்டம் உலா வருகிறது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் சுற்றி உள்ள கிராமப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக யானைகள் விவசாய விளைநிலங்கள் மற்றும் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை அடுத்து அதனை தடுக்கும் ...
அதிகாலையில் வீட்டை சேதப்படுத்திய காட்டு யானையை விரட்ட,வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் வராததால், தொழிலாளர்கள் விடிய விடிய தூங்காமல் தவித்தனர். கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள ஸ்டான்மோர் எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் நுழைந்த அப்பன் டவுன் என்ற ஒற்றை காட்டு யானை, அங்குள்ள பார்வதி என்பவரின் குடியிருப்பின் ஜன்னல் மற்றும் கதவுகளை உடைத்தது. சத்தம் ...
தனியார் தோட்டத்தில் புகுந்த காட்டு யானை கூட்டத்தில், இரண்டு ஆண் யானைகள் சண்டையிடும் காட்சிகள், கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. அதேபோல் யானைகள் வலசை போகும் மிக முக்கியமான வழித்தடமாக, கோவை வனப்பகுதி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள ...













