ரூ.462 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்..

மிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் நேற்று வரை உரிய ஆவணங்கள் இல்லாத 462 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள தகவலில்
அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுக்கள், 24 மணி நேரமும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருப்பதாகவும் ஏராளமான ரொக்கம் மற்றும் பொருட்களை அவர்கள் வாகனச் சோதனையில் பறிமுதல் செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.இதுவரை கணக்கில் வராத 92 கோடியே 7 லட்சம் ரூபாய் ரொக்கமும், 2 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்
75 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் 214 கோடி ரூபாய் 38 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களும் , இலவசங்கள் உள்ளிட்ட 78 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மாவட்டக் குனறதீர்ப்பு ஆணையம் அல்லது வருமான வரித்துறையிடம் ஆவணங்களைச்
சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, எவ்வித அலைக்கழிப்பு ஏற்படாதவாறு ரூ.278 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.