கோவை மே 10 கோவை பக்கம் உள்ள கே .கே . புதூர், நாகம்மாள் வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் . இவரது மகன் ஹரிகரன் (வயது 26) இவரது நண்பர் சந்தோஷ்க்கும்அதே பகுதியைச் சேர்ந்த இம்ரான் ( வயது 26)என்பவருக்கும் கார் பார்க்கிங் தொடர்பாக உன் விரோதம் இருந்து வந்தது. இது கோஷ்டி மோதலாக வெடித்தது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர் இந்த தாக்குதலில் ஹரி,மற்றொரு கோஷ்டியை சேர்ந்த சேர்ந்த இம்ரான் ஆகியோர் காயமடைந்தனர். இதுகுறித்து இருதரப்பிலும் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது. ஹரி கொடுத்த புகாரின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த சூரிய தினேஷ் ( 21 ) இம்ரான் (26) நிஹால் ( 21) முகமது பாரூக் ( 30) செய்யது ஆதிவ் ஆசாத் ( 21 ) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இம்ரான் கொடுத்த புகாரின் பெயரில் ஹரிகரன் ( 26 ) சந்தோஷ் குமார் ( 26 ) தவ்பிக் ( 24) சாய் சித்தார்த் (23) பரத் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
கார் பார்க்கிங் தகராறில்கோஷ்டி மோதல் : 2 பேர் காயம் .10 பேர் கைது .
