கோவை : சென்னையைச் சேர்ந்தவர் லாவண்யா (வயது 40) மலர் ( வயது 40) இவர்கள் 2 பேரும் தங்களது குழந்தைகளை கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காக்க நாட்டில் நடைபெறும் அபாகஸ் (எண் கணிதம் )போட்டியில் கலந்து கொள்ள வைக்க திட்டமிட்டனர். அதன்படி லாவண்யா அவரது கணவர் சாய்ராம் (வயது 48) அவர்களது 8 வயது மகன் மற்றும் மலர் அவரது 3 வயது குழந்தை உட்பட இரண்டு குழந்தைகள் சென்னையில் இருந்து காரில் காக்க நாட்டுக்கு சென்றனர். காரை டிரைவர் செல்வன் ஓட்டினார். அங்கு நடந்த போட்டியில் குழந்தைகள் கலந்து கொண்டனர் .பின்னர் அவர்கள் அங்கிருந்து சொந்த ஊருக்கு செல்ல புறப்பட்டனர். கோவை அடுத்த வாளையார் சோதனை சாவடி அருகே நேற்று அதிகாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. விபத்தில் காரில் இருந்த 7 பெரும் சிக்கிக் கொண்டனர். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர் .தகவல் அறிந்ததும் வாளையார் போலீசார் கஞ்சிக்கோடு தீயணைப்பு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டார்கள். விபத்தில் லாவண்யா, மலர் ஆகிய 2 பெண்களும் பேரும் உடல் நசுங்கி அதே இடத்தில் இறந்தனர். சாய்ராம் 3 வயது குழந்தை உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு வாளையார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். டிரைவர் லேசான காயமடைந்தார்.உயிருக்கு ஆபத்தான நிலையில் 3 வயது குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .விபத்து குறித்து வாளையார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாலையில் நின்ற லாரி மீது கார் பயங்கர மோதல் : 2 பெண்கள் பலி – குழந்தை உள்பட 4 பேர் படுகாயம்..
