மாநிலக் கல்லூரி மாணவர்களை எதிர்த்து வாழ்ந்திட முடியுமா..? நான்கு மாணவர்கள் கைது.!!

சென்னையில் பெற்றோர்கள் தங்களது மகன்கள் படித்து பெரிய ஆளாக வேண்டும் நம்மை வைத்து சாகும்வரை சோறு போடுவார்கள் என்ற நம்பிக்கையில் தங்களது குடும்ப நகைகளை அடகு வைத்து கல்லூரியில் சேர்க்கின்றனர். ஆனால் நிலைமை தலைகீழ் நேற்று காலை 9 மணி அளவில் பெரம்பூர் லோகோ ரயில் நிலையம் இரண்டாவது பிளாட்பார்மில் திருவள்ளூரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி பயணிகள் விரைவு ரயில் வந்து நின்றது . அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சில மாநிலக் கல்லூரி மாணவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஜல்லி கற்களை எடுத்து ரயில்கள் மீதும் ரயிலில் வந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீதும் சரமாரியாக வீசினர். வீசி விட்டு டேய் நாங்கள் மாநிலக் கல்லூரி மாணவர்கள் ரவுடித்தனத்திற்கே பிறந்தவர்கள் சென்னையில் எங்கு வேண்டுமானாலும் கேட்டுப்பார் எனக்கூறி அருவருக்குத்தக்க வார்த்தைகளில் பேசி சரமாரியாக தாக்கி விட்டு ஓடி விட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தலைமைக் காவலர் பெரம்பூரில் உள்ள ரயில்வே போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சென்னை ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பு திருச்சி செந்தில்குமார் எழும்பூர் ரயில்வே டிஎஸ்பி ரமேஷ் உத்தரவின் பெயரில் குற்றவாளிகள் மீது தயவு தாட்சினையும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்குப்பதிந்து மூன்று தனிப்படைகளை அமைத்தார். அவர்கள் சம்பவம் நடந்த ரயில்வே ஸ்டேஷனில் சி சி டிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் குற்றவாளிகள் மாநில கல்லூரி மாணவர்கள் என தெரிய வந்தது. பாதிக்கப்பட்டது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் குற்றவாளிகள் பெயர் விவரம் வருமாறு தீனா வயது 18 ஈக்காடு திருவள்ளூர் பிஏ வரலாறு இரண்டாம் ஆண்டு ஹரிஷ் வயது 19 போலிவாக்கம் திருவள்ளூர் பி ஏ ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு மாதேஷ் வயது 19 நுங்கம்பாக்கம் திருவள்ளூர் பிஎஸ்சி விலங்கியல் இரண்டாம் ஆண்டு பார்த்திபன் வயது 19 ஒதப்பை திருவள்ளூர் பிஎஸ்சி விலங்கியல் இரண்டாம் ஆண்டு ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும் தலைமறைவான கல்லூரி மாணவர்களை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதுகுறித்து தமிழக ரயில்வே போலீஸ் ஏடிஜிபி வனிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது மாணவர்களின் பெற்றோர்களும் கல்லூரி ஆசிரியர்களும் முதல்வரும் நல்லொழுக்கத்தை கற்பித்து ஈடுபட வேண்டாம் என அறிவுரை கூற வேண்டும். மாணவர்களும் நாம் வாழ்க்கையில் உயர்ந்திட எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என நினைத்து பார்க்க வேண்டும் என கூறியுள்ளார் . மேலும் ரயில் பயணிகள் நலனுக்காக 1512 என்ற எண்ணம் 9962500500 வாட்ஸ் அப்பை தொடர்பு கொண்டு சந்தோஷமான பயணத்தை தொடரலாம் எனக் கூறப்பட்டுள்ளது..