நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே சேலக்குன்னா கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் வீட்டில் மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று வீட்டில் வளர்த்த எருமை கன்று ஒன்று மாயமாகி இருந்தது. அக்கம்பக்கம் தேடி பார்த்தார். அப்போது அருகே இருந்த புல்வெளியில் கன்றுகுட்டி இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்த பிதர்காடு வனச்சரகர் ரவி, வனவர் பெலிக்ஸ், வேட்டை தடுப்பு காவலர் கலைக்கோவில், வி.ஏ.ஓ.கர்ணன் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். அதில் செந்நாய்கள் எருமையை வேட்டையாடியது தெரியவந்தது. கால்நடை டாக்டர் ராஜராஜன் பிரேத பரிசோதனை செய்தார். வனத்துறையினர் கூறுகையில்,’ இந்த பகுதியில் கால்நடைகளை விலங்குகள் வேட்டையாடி வரும் நிலையில், கால்நடை வளர்ப்போர் அவற்றை பாதுகாக்க வேண்டும். மக்களும் இரவில் இப்பகுதிகளில் நடமாட கூடாது என்றனர்.
Leave a Reply