மின்சாரம் தாக்கி வியாபாரி பலி

கோவை கரும்புக்கடை இலாகி நகரை சேர்ந்தவர் முகம்மத் யூசுப் (வயது 45) இவர்கோவை – பொள்ளாச்சி ரோட்டில் உள்ள எல்.ஐ.சி .காலனியில் சீட் கவர் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவுகடையை பூட்டுவதற்கு இரும்பு ராடால் ஷட்டரை இழுக்கும்போதுமின் வயரில் பட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் வழியில் அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து சுந்தரபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் கன்னையன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்