புது தில்லி: பிரம்மோஸ் வான்வெளி சோதனைக்கூடம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
லக்னௌ நகரில் நிறுவப்பட்டுள்ள ‘பிரம்மோஸ் வான்வெளி ஒருங்கிணைப்பு மற்றும் சோதனைக்கூடத்தை’ பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு நேற்று (மே 11) அர்ப்பணித்தார்.
இதன் தொடக்க விழாவில் காணொலி வழியாக அமைச்சர் கலந்து கொண்டார். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அம்மாநில அமைச்சர்கள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.