தூத்துக்குடி மாவட்டம் செம்மறிக்குளம் கஸ்பாவில் அருள்மிகு. பிரம்ம சக்தி அம்மன் திருக்கோவில் உள்ளது. இதன் வருஷாபிஷேக விழா இன்று நடந்தது. விழாவில் செம்மறி குளம் முன்னாள் ஊராட்சி தலைவர் எம். குணசேகரன், பா.ஜ.க. விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில பொறுப்பாளர் வி. ஆர். வேலுமயில், சென்னை தொழிலதிபர் ஆனந்தன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
பிரம்ம சக்தி அம்மன் கோவில் வருஷாபிஷேக விழா.!









