விஜய், அஜித் இருவருமே சூப்பர் ஸ்டார்கள் தான்… நடிகர் மோகன் பேட்டி..!

கோவை திருமலையாம் பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் விஸ்காம் மாணவர்களுக்காக கல்லூரி வளாகத்தில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட தியேட்டர் திறக்கப்பட்டது. திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் மோகன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறும்போது:-
காட்சி தொடர்பியல் (விஸ்காம்) மாணவர்களுக்கு மல்டிபிளக்ஸ் தியேட்டர் கொண்டு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.கல்லூரி வளாகத்தில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் என்பது இந்தியாவிலேயே முதல்முறை என்பது பாராட்டுக்குரியது. துணிவு, வாரிசு எதற்கு முதல் டிக்கெட் கிடைக்கிறதோ அதை பார்ப்பேன். விஜய், அஜித் இருவரும் சூப்பர் ஸ்டார்கள் தான். ஆனால் பட்டம் என்றால் அது ரஜினிக்கு தான். ரஜினி தான் சூப்பர் ஸ்டார் அந்த பட்டம் அவருக்கு கொடுக்கப்பட்டது.

படத்தின் வெற்றி இயக்குனர் கையில் தான் இருக்கிறது. படத்தின் கதை நன்றாக இருந்தால் நடிப்பேன். கதை, இயக்கம் பிடித்தால் மட்டும் தான் படத்தை ஒப்புகொள்வேன். துணிவு, வாரிசு 2 படமும் பார்ப்பேன் என்றார்.மேலும் தமிழக ஆளுனர் குறிப்பிட்ட தமிழகமா?தமிழ்நாடா? என்ற கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் நிகழ்ச்சிக்கு வருகிறார். அவரிடம் இந்த கேள்வியை கேளுங்கள் என பதில் அளித்தார்.