கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

கோவையில் மத்திய மாநில அரசு அலுவலகங்களுக்கு “இ-மெயில் ” மூலம் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வருகிறது. இது குறித்து போலீசார் சோதனை நடத்தும் போது அது புரளி என்பது தெரிய வருகிறது .இந்த நிலையில் நேற்று கோவை அவிநாசி ரோடு உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு “இமெயில் ‘மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இது குறித்து மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சதீஷ்குமார் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதை தொடர்ந்து கோவை வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு போலீசார் மற்றும் வெடிகுண்டுகளை கண்டறியும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திலும்,பீளமேட்டில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திலும் தீவிர சோதனை நடத்தினர் . இதில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. எனவே இதுவும் வழக்கம்போல வெறும்புரளி என்று தெரிய வந்தது..