கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகம், விமான நிலையம், டைட்டல் பார்க்ஆகிய இடங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவையில் உள்ள நீதிமன்றம் மற்றும் ரேஸ்கோர்சில் உள்ள ஜூடிசியல் அகாடமி ஆகியவற்றுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு இமெயில் மூலம் இன்று ஒரு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து வெடிகுண்டு கண்டுபிடிப்பு நிபுணர்கள்,மெட்டல் டிடெக்டர், மோப்பநாய் உதவியுடன் அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தினார்கள்.வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.வெறும் புரளி என்று தெரியவந்தது.இமெயில் மூலம் தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துவரும் மர்ம ஆசாமியை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்..