கோவை கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம்,ஜூடிசியல் அகாடமி, பாஸ்போர்ட் அலுவலகம், டைட்டல் பார்க்ஆகியவற்றுக்கு இமெயில் மூலம் ஏற்கனவே வெடிகுண்டு மிரட்டல் வந்தது .போலீஸ் சோதனையில் அது வெறும் புரளி என்று தெரியவந்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் பல்வேறு விமான நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக ” இமெயில் “மூலம் நேற்று மிரட்டல் வந்தது, அதில் கோவை விமான நிலையத்தின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் கோவை விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உஷார் படுத்தினார்கள். இது குறித்து கோவை மாநகர போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வெடிகுண்டு கண்டுபிடிப்பு நிபுணர்கள்,மோப்ப நாய் உதவியுடன் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை சோதனை நடத்தினார்கள் .இந்த சோதனையில் வெடிகுண்டுஎதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இந்த திடீர் சோதனையால் கோவை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
கோவை விமான நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்..!
